Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக் தொடர் திட்டத்திற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு.. முடிவை கைவிட்ட ஐசிசி

மும்பை: உலகளாவிய டி20 பிரான்சைஸ் கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை ஐசிசி கைவிட்டுள்ளது. கிரிக்கெட்டின் முன்னணி மூன்று நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய வாரியங்களின் தீவிர எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வரும் 2031 ஆம் ஆண்டு வரை ஐசிசி இதுபோன்ற எந்தவொரு டி20 தொடரையும் அறிமுகப்படுத்தாது.கடந்த 2009 முதல் 2014 வரை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் ஐபிஎல், பிக் பாஷ் லீக் போன்ற உலகின் முன்னணி லீக் தொடர்களின் சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடின. எனினும், போதிய அளவிலான பார்வையாளர்கள் இல்லாதது, குறைவான வருவாய் மற்றும் கடுமையான நிதி இழப்புகள் காரணமாக இத்தொடர் பின்னர் நிறுத்தப்பட்டது.

Mumbai Indians

தற்போது உலகளவில் டி20 லீக் போட்டிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சூழலில், சாம்பியன்ஸ் லீக் தொடரை மீண்டும் கொண்டு வர ஐசிசி திட்டமிட்டிருந்தது. உலகெங்கும் உள்ள தனியார் டி20 லீக் போட்டிகளில் இருந்து ஐசிசிக்கு எந்தவித வருவாயும் கிடைக்காத நிலையில், கிரிக்கெட்டின் மீதான தனது கட்டுப்பாட்டை அதிகரிக்கவும், வருவாயைப் பெருக்கவும் இந்த வாய்ப்பை பயன்படுத்த ஐசிசி முயன்றது.

IND vs NZ டெஸ்ட் தொடர்.. இந்திய அணியில் மிரட்டலான பந்துவீச்சு.. 3 ஸ்டார் வீரர்களுக்கு வாய்ப்பு

IND vs NZ டெஸ்ட் தொடர்.. இந்திய அணியில் மிரட்டலான பந்துவீச்சு.. 3 ஸ்டார் வீரர்களுக்கு வாய்ப்பு

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையை போல இந்த டி20 தொடரை வடிவமைக்க ஐசிசி விரும்பியது. அத்துடன் இருதரப்பு தொடர்களுக்கு இடையே நான்கு நாடுகள் பங்கேற்கும் டி20 தொடரை நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், ஏற்கனவே கிரிக்கெட் அட்டவணை மிகவும் நெருக்கடியாக இருப்பதால், கூடுதல் போட்டிகளுக்கு வழியே இல்லை என்பதில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் பிடிவாதமாக இருந்தன.

ஐசிசி உலகக் கோப்பை அல்லது சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியத் தொடர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் மட்டுமே, சாம்பியன்ஸ் லீக் போன்ற புதிய தொடருக்கு வாய்ப்பு இருக்கும் என்பது 'பிக் த்ரீ' நாடுகளின் கருத்தாக இருந்தது. இந்த முட்டுக்கட்டை காரணமாக, 2027-2031 ஆண்டுகளுக்கான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டம் தற்போதைய நிலையை ஒட்டியே தொடரும். இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.

புதிய ஊடக ஒளிபரப்பு உரிமங்களின் மூலம் ஐசிசி-யின் வணிக ரீதியிலான வருவாய் குறையும் அபாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஐசிசிக்கு அதிக அளவிலான வருவாய் பங்களிப்பை அளிக்கும் இந்திய ஒளிபரப்பு நிறுவனங்கள், முதலீட்டைக் குறைத்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

IND vs NZ டெஸ்ட் தொடரில் வெற்றி முக்கியம்.. பலே திட்டத்தை போட்ட பிசிசிஐ

Also Read

IND vs NZ டெஸ்ட் தொடரில் வெற்றி முக்கியம்.. பலே திட்டத்தை போட்ட பிசிசிஐ

இதனால் தனது வருவாயைப் பெருக்க ஐசிசி புதிய வழிகளைத் தேடினாலும், பிக் த்ரீ நாடுகள் தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. தற்போதைய சூழல் தங்கள் நாட்டு டி20 லீக் போட்டிகள் மூலம் வருவாயைப் பெருக்கவும், கிரிக்கெட் விளையாட்டின் போக்கை தீர்மானிக்கும் அதிகாரத்தை வைத்திருக்கவும் அவர்களுக்கு சாதகமாக உள்ளது.

Story first published: Monday, October 5, 2026, 16:51 [IST]
Other articles published on Oct 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+