Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஹலோ.. ஹலோலோ” செல்போனால் வந்த வினை.. உலகக்கோப்பையில் கபடி ஆடிய மருத்துவர்கள்.. சிரிப்பலை வீடியோ!

வெஸ்ட் இண்டீஸ்: U 19 உலகக்கோப்பை தொடரின் போது மருத்துவர்கள் குழு திடீரென பதற்றத்தில் கபடி ஆடி கீழே விழுந்த வீடியோ இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

விவின் ரிச்சர்ட்சன் மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

U 19 உலகக்கோப்பை தொடர்

U 19 உலகக்கோப்பை தொடர்

அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 4வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. மற்றொரு புறம் இங்கிலாந்து அணி 1998ம் ஆண்டிற்கு பிறகு 2வது முறையாக கோப்பையை வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

நகைச்சுவை வீடியோ

இந்நிலையில் இந்த பரபரப்பு சூழலில் வேடிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது ஐசிசி. அதில், போட்டியின் போது மருத்துவக்குழுவை சேர்ந்த இரண்டு பேர் மைதானத்திற்கு சிகிச்சை அளிக்க செல்வதற்காக வழி தேடியுள்ளனர். செல்போன் பேசிக்கொண்டே இருந்ததால் வழி எங்கிருக்கிறது எனத்தெரியவில்லை. இதனால் "யாருடா இனி தேடுவான்" என நினைத்து தடுப்பு பலகை மீறி ஏறி குதித்தனர். குறுக்கு வழியை பயன்படுத்தியதன் விளைவாக கால்கள் தடுக்கி கீழே விழுந்து சிரிப்பலையை ஏற்படுத்தினர்.

கால்பந்து விளையாட்டு

கால்பந்து விளையாட்டு

கீழே விழுந்தும் கூட சோர்வடையாத மருத்துவர்கள், வியர்வை சொட்ட சொட்ட மீண்டும் மைதானத்திற்கு சென்று சிகிச்சை அளித்தனர். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதுமட்டுமல்லாமல் கீழே கிடந்த கிரிக்கெட் பந்தை வைத்து கால்பந்தாட்டமும் விளையாடி மகிழ்ந்தார்.

நகைச்சுவை கமெண்ட்

நகைச்சுவை கமெண்ட்

இதுகுறித்து கமெண்ட்ரியிலிருந்து பேசிய ஆலன் வில்கின்ஸ், மருத்துவர்களுக்கே தற்போது மருத்துவ உதவிகள் தேவைப்படும் என நினைக்கிறேன். ஏற்பாடு செய்து வையுங்கள் என நகைச்சுவையாக கூறினார். இந்த் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பாராட்டு

பாராட்டு

ஒருபுறம் அவர்களின் இந்த செயல் நகைச்சுவையாக இருந்த போதும், மற்றொரு புறம் வீரரின் நிலைமையை புரிந்துக்கொண்டு துரிதமாக செயல்பட்டதை நினைத்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய முன்னாள் வீரர் யூசஃப் பதான் கூட சிறப்பான செயல் என பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 4, 2022, 19:27 [IST]
Other articles published on Feb 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+