For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்… டெஸ்ட் போட்டி ரத்துக்கு சப்போர்ட் செய்த ஐசிசி

துபாய்: வங்கதேசம், நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து என்ற முடிவை ஐசிசி முழுமையாக ஆதரிப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் அறிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. 3வது போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Icc supports cancellation of newzealand, bangladesh 3rd test in wake of christchurch mosque attack

இந்நிலையில், நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசலில், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சென்றிருந்தனர், அப்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

அதிலிருந்து நூலிலையில் வீரர்கள் உயிர் தப்பி, தற்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் பலரும் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு நலன் கருதி டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து அறிவித்துள்ளது. அந்த முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி முழுமையாக ஆதரித்துள்ளது.

பெங்களூருவின் இந்திய வீரர்கள்.. கோவாவின் வெளிநாட்டு வீரர்கள்.. இறுதிப் போட்டியில் யாருக்கு வெற்றி? பெங்களூருவின் இந்திய வீரர்கள்.. கோவாவின் வெளிநாட்டு வீரர்கள்.. இறுதிப் போட்டியில் யாருக்கு வெற்றி?

இதுகுறித்து கருத்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறியதாவது:இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. இந்த முடிவினை ஐசிசி முழுமையாக ஆதரிக்கிறது. மேலும், தாக்குதலுக்கு கண்டனத்தையும் பதிவு செய்கிறது என்று கூறினார்.

Story first published: Saturday, March 16, 2019, 10:01 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
ICC supports cancellation of NZ-Bangla Test in wake of Christchurch mosque attack.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X