Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை பட்டியல் ரிலீஸ்.. ரெண்டே ரெண்டு இந்திய வீரர்கள் இருக்காங்க... யாருன்னு பாருங்க

துபாய்:ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில், பவுலிங், பேட்டிங் இரு பிரிவிலும் 2 இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசியின் டி20 தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 726 புள்ளிகளுடன் 5ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். டாப் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய வீரர் அவர் மட்டும் தான்.

முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் உள்ளார். 2-வது இடத்தில் நியூசி. வீரர் கோலின் முன்ரோவும் ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் முறையே 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளனர்.

6,7,8 இடங்கள்

6,7,8 இடங்கள்

6-வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரத்துல்லா, 7வது இடத்தில் ஆஸி.யின் ஷார்ட் ஆகியோர் உள்ளனர். 8வது இடம் மேற்கிந்திய தீவுகள் அணியின் லூயிசுக்கு கிடைத்திருக்கிறது.

11வது இடத்தில் ரோகித்

11வது இடத்தில் ரோகித்

9 மற்றும் 10வது இடத்தில் முறையே.. பாகிஸ்தானின் பக்கர் ஜமான், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் உள்ளனர். ரோகித் சர்மா 11-வது இடத்தில் உள்ளார்.

தரவரிசையில் உயர்வு

தரவரிசையில் உயர்வு

இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ 55 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் 56 இடங்கள் உயர்ந்து, 84வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

முதலிடத்தில் ரஷித் கான்

முதலிடத்தில் ரஷித் கான்

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் 5வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சு தர வரிசையிலும் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் இவர்தான். இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன் 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சில் முன்னேற்றம்

பந்துவீச்சில் முன்னேற்றம்

அதேபோல இங்கிலாந்து வீர்ர டேவிட் வில்லேயும் தரவரிசையில் 11வது இடத்தை பிடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் வீரர் நிகோலஸ் 18 இடங்கள் முன்னேறி 79வது இடத்துக்கு வந்துள்ளார். இடதுகை ஸ்பின்னர் பேபியன் ஆலன் 33வது இடங்கள் முன்னேறி, 72வது இடத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, March 13, 2019, 15:17 [IST]
Other articles published on Mar 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+