Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி 20 தரவரிசை பட்டியல்.. தினேஷ் கார்த்திக் சிங்க பாய்ச்சல்.. சாஹல், இஷான் கிஷன் முன்னேற்றம்

துபாய்: ஐசிசி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான லேட்டஸ்ஙட தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் அஸ்வினை பின்னுக்கு தள்ளி வங்கதேச வீரர் ஷகிபுல் ஹசன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டிலும் அரைசதம் அடித்த நிலையில் ஷகிபுல் ஹசன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசை

டெஸ்ட் தரவரிசை

இதில், இந்திய வீரர் ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் ஜடேஜா ஜொலித்தால் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பார். டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் ஜோ ரூட் தொடர்ந்து முதலிடத்திலும், மார்னஷ் லாபஸ்சேங் 2வது இடத்திலும் , 3வது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், 4வது இடத்தில் பாபர் அசாம், 5வது இடத்தில் வில்லியம்சனும் உள்ளனர்.

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 754 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், விராட் கோலி 742 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளனர். இதே போன்று ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் பாட் கம்மின்ஸ் முதலிடத்திலும், அஸ்வின் 2வது இடத்திலும், பும்ரா 3வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் மட்டும் 7வது இடத்தில் நீடிக்கிறார்.

ஒருநாள், டி20 தரவரிசை

ஒருநாள், டி20 தரவரிசை

இதே போன்று ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாபார் அசாம் முதலிடத்திலும், விராட் கோலி 3வது இடத்திலும், ரோகித் 4வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா மட்டும் 5வது இடத்தில் நீடிக்கிறார். ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்க தொடரில் 206 ரன்கள் குவித்த இஷான் கிஷன் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் பாய்ச்சல்

தினேஷ் கார்த்திக் பாய்ச்சல்

இந்திய அணியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்து தென்னாப்பிரிக்க தொடரில் 26 பந்துகளில் அரைசதம் விளாசிய தினேஷ் கார்த்திக் 108 இடங்கள் முன்னேறி தற்போது 87வத இடத்தில் உள்ளார். இதே போன்று பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் சாஹல், 3 இடங்கள் முன்னேறி 23வது இடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Wednesday, June 22, 2022, 17:53 [IST]
Other articles published on Jun 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+