For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 தரவரிசையில் அதிரடி மாற்றம்..சூர்யகுமாருக்கு சரிந்த புள்ளிகள்.. இங்கிலாந்து வீரர்கள் முன்னேற்றம்

துபாய் : ஐசிசி t20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக வென்றது. இந்த நிலையில் தொடர் முடிந்தவுடன் டி20 தரவரிசை பட்டியலில் அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன.

உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் தரவரிசை பட்டியலில் முன்னேறி இருக்கிறார்கள். இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் டி20 உலக கோப்பையில் 239 ரன்களை விளாசி இருக்கிறார்.

இதன் மூலம் அவர் ஐசிசி டி20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

டாப் 3 இடம்

டாப் 3 இடம்

எனினும் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 16 ரன்களில் அவர் ஆட்டம் இழந்ததால் அவருடைய புள்ளிகள் 869 இல் இருந்து 859 ஆக குறைந்து இருக்கிறது. அதே போன்று பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்மான் 836 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அரை இறுதியில் அரைசதம் அடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

இதேபோன்று அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 47 பந்தில் 86 ஆண்கள் விளாசிய அலெக்ஸ் ஹெல்ஸ் 22 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளார். இதேபோன்று டி20 உலக கோப்பையில் சதம் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர் ரூசோவ் ஏழாவது இடத்திலும் நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.மூன்றாவது இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் கான்வே 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

இதை போன்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரசித் சிங்கப்பாய்ச்சலை தரவரிசையில் பாய்ந்து உள்ளார். அரையறுதியில் ஒரு விக்கெட்டும், இறுதிப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆதில் ரசித் தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.இதேபோன்று இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சாளரும் டி20 உலக கோப்பை தொடர் நாயகன் இருதயம் வென்ற ஷாம் கரணம் இருண்ட இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

டி20 தரவரிசை அணிகள்

டி20 தரவரிசை அணிகள்

இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் அசரங்கா தொடர்ந்து முதலிடத்திலும் ரசித் கான் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஷகிபுல் ஹசன் முதலிடத்திலும், முகமது நபி இரண்டாவது இடத்திலும், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். டி20 தர வரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலக கோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவினாலும் 268 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்திலும், 265 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 258 புள்ளிகளுடன் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Story first published: Wednesday, November 16, 2022, 20:28 [IST]
Other articles published on Nov 16, 2022
English summary
ICC T20 Latest Rankings - England Players jumped in the list - India at top position டி20 தரவரிசையில் அதிரடி மாற்றம்..சூர்யகுமாருக்கு சரிந்த புள்ளிகள்.. இங்கிலாந்து வீரர்கள் முன்னேற்றம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+