For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC தரவரிசை பட்டியல் - உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்..எகிறிய புள்ளிகள்..ஏணி வைத்தாலும் தொட முடியாது

துபாய் : ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். மேலும் அவர் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.

ஏற்கனவே டி20 உலக கோப்பை போட்டியில் 239 ரன்கள் குவித்து முதலிடத்தை உறுதி செய்த சூரியக்குமாரியாதவ், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 111 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் 32 வயதான சூரிய குமார் 895 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

54 புள்ளிகள் இடைவெளி

54 புள்ளிகள் இடைவெளி

எனினும் கடைசி டி20 போட்டியில் 13 ரன்கள் அடித்ததால் 5 புள்ளிகள் சரிந்து 890 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இருக்கிறார். அவர் 836 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளார். சூரியகுமார் யாதவுக்கும், இரண்டாவது இடத்தில் உள்ள வீரருக்கும் 54 புள்ளிகள் இடைவெளி இருக்கிறது.

சிஎஸ்கே வீரர் முன்னேற்றம்

சிஎஸ்கே வீரர் முன்னேற்றம்

இதைப் போன்று சிஎஸ்கே வீரர் டிவோன் கான்வே 788 புள்ளிகள் பெற்று பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்தார். இதனால் பாபர் அசாம் நான்காவது இடத்திற்கு சரிந்தார். மற்றொரு இந்திய வீரரான இஷான் கிஷன், 10 இடங்கள் முன்னேறி 33வது இடத்தை பிடித்துள்ளார் .அதேபோன்று நியூசிலாந்தின் அதிரடி வீரர் கிளன் பிலிப்ஸ், ஒரு இடம் முன்னேறி ஏழாவது இடத்தில் உள்ளார்.

கோலி சரிவு

கோலி சரிவு

கேன் வில்லியம்சன் ஐந்து இடங்கள் முன்னேறி 35 வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து தொடரில் இடம் பெறாத விராட் கோலி இரண்டு இடங்கள் சரிந்து 13 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் பத்து இடத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை.எனினும் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் இரண்டு இடங்கள் முன்னேறி 11வது இடத்திலும், திம் சவுதி இரண்டு இடங்கள் முன்னேறி 14வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸி. வீரர்கள் முன்னேற்றம்

ஆஸி. வீரர்கள் முன்னேற்றம்

இதேபோன்று ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் டேவிட் வார்னர் ஒரு சதம் மற்றும் அரை சதம் அடித்ததன் மூலம் ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தை உள்ளார். இதேபோன்று ஸ்டீவன் ஸ்மித் மூன்று இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்திலும் , ட்ராவிஸ் ஹெட் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டியில் 240 ரன்கள் குவித்ததன் மூலம் 12 இடங்கள் முன்னேறி 30 வது இடத்திலும் உள்ளனர்.இதே போன்று ஒரு நாள் போட்டி பந்து வீச்சாளருக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிச்சல் ஸ்டார்க் நாலாவது இடத்திலும் ஆடம் சாம்பா எட்டாவது இடத்திலும் முன்னேறி உள்ளனர்.

Story first published: Wednesday, November 23, 2022, 16:59 [IST]
Other articles published on Nov 23, 2022
English summary
ICC T20 Latest Rankings - suryakumar reached new height ICC தரவரிசை பட்டியல் - உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்..எகிறிய புள்ளிகள்..ஏணி வைத்தாலும் தொட முடியாது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+