Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி20 ஆல்ரவுண்டருக்கான தரவரிசை.. ஜடேஜாவை முந்திய விராட் கோலி.. எப்படி இது சாத்தியம்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் டி20 போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் யாருமே எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

அதாவது விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் பந்துவீசி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர் ஆல்ரவுண்டரான ஜடேஜாவை விட தரவரிசை பட்டியலில் முன்னிலையில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

indian cricket team virat kohli

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் 49 புள்ளிகள் உடன் விராட் கோலி 79வது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று ஜடேஜா 45 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 86வது இடத்தில் இருக்கிறார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஐசிசி ஆல் ரவுண்டர் என்ற அடிப்படையில் தரவரிசையை கணக்கிடும் போது பேட்டிங் மற்றும் பௌலிங் புள்ளிகளை பெருக்கி அதனை ஆயிரத்தால் வகுத்தால் என்ன புள்ளிகள் வருகிறதோ அதை வைத்து தான் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி ஜடேஜாவின் பேட்டிங் விட விராட் கோலியின் பேட்டிங் புள்ளிகள் சிறந்த முறையில் இருக்கிறது. அதனை வைத்து கணக்கிடும் போது ஜடேஜாவை விட விராட் கோலி முன்னிலையில் இருந்திருக்கிறார். விராட் கோலி இதுவரை 125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4118 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் பேட்டிங் சராசரி 48 ஆகும், ஸ்ட்ரைக் ரேட் 137 ஆகும்.

விராட் கோலி பந்துவீச்சில் இதுவரை நான்கு விக்கெட் சர்வதேச போட்டிகளில் எடுத்திருக்கிறார். அதே சமயம் ஜடேஜா 74 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி வெறும் 515 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். விக்கெட்டுகள் 74 ஆகும். எனினும் 8 ஆண்டுகளாக பந்து வீசாத விராட் கோலி ஜடேஜாவை ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முந்தி இருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆச்சரியம் அடைய செய்திருக்கிறது.

Story first published: Thursday, July 4, 2024, 15:55 [IST]
Other articles published on Jul 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+