Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை-நம்பர் 1 இடத்திற்கு வந்தார் ஹர்திக் பாண்டியா-சதம் விளாசிய திலக் வாமா,சாம்சன் பாய்ச்சல்

மும்பை : தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இரண்டு சதங்களை விளாசி அசத்தினர்.

அது மட்டுமில்லாமல் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். இதன் மூலம் தற்போது டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.

icc rankings hardik pandya tilak varma sanju samson

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் 39 ரன்களும், பந்துவீச்சில் எட்டு இடங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா இரண்டாவது முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார்.

இதன் மூலம் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோனை அவர் பின்னுக்கு தள்ளி இருக்கிறார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஹர்திக் பாண்டியா சரிவை நோக்கி சென்ற நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் பின்னடைவை சந்தித்தார். ஆனால் தற்போது அதையெல்லாம் மீண்டு தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ந்து இரண்டு சதம் அடித்த திலக் வர்மா அந்தத் தொடரில் 280 ரன்கள் குவித்தார். இதன் மூலம் திலக் வர்மா பேட்டிங் வரிசையில் 69 இடங்கள் முன்னேறி தற்போது பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்தத் தொடரில் தொடர்ந்து தடுமாறிய சூரியகுமார் யாதவ் ஒரு இடம் சரிந்து தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இரண்டு சதம் விளாசி இருக்கும் சஞ்சு சாம்சன் 17 இடங்கள் முன்னேறி தற்போது பேட்டிங் வரிசையில் 22 வது இடத்தை பிடித்திருக்கிறார். தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மூன்று இடங்கள் முன்னேறி 23வது இடத்திலும் ஹென்ரிச் கிளாசன் ஆறு இடங்கள் முன்னேறி 59 வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.

இதைப் போன்று பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஆர்ஸ்தீப் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார். ரவி பிஸ்னாய் ஒரு இடம் சரிந்து தற்போது எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதேபோன்று அக்சர் பட்டேல் 10 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்திருக்கின்றார்.

Story first published: Wednesday, November 20, 2024, 18:19 [IST]
Other articles published on Nov 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+