Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு சாதகம்.. ஆரம்பமே பாகிஸ்தானுக்கு சறுக்கல்

மெல்போர்ன் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மெல்போர்னில் தற்போது மழை பெய்யாத நிலையில், டாஸ் ஒரு 5 நிமிடத்திற்கு முன்பே வீசப்பட்டது.

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதில் உள்ள சாதகங்களை தற்போது காணலாம்.

இங்கிலாந்து சாதகம்

இங்கிலாந்து சாதகம்

மெல்போர்னில் தற்போதைய நிலவரப்படி மழை பெய்யவில்லை. எனினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆடுகளத்தில் புற்கள் இருப்பதால், பந்த நன்றாக ஸ்விங் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலில் பந்தவீசும் இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தானுக்கு நல்ல நெருக்கடியை கொடுக்க முடியும்.

பாகிஸ்தான் பாதகம்

பாகிஸ்தான் பாதகம்

பந்து ஸ்விங் ஆவதால் பாகிஸ்தான் முதலில் கொஞ்ச ஓவர்கள் மெதுவாக விளையாட வேண்டியதாக இருக்கும். இதன் காரணமாக பாகிஸ்தான் 150 மற்றும் 160 ரன்களை தொட்டால் கூட, அதனை இங்கிலாந்து எளிதில் துரத்த நல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இரு அணியும் அரையிறுதியில் களமிறங்கிய வீரர்களையே இறுதிப் போட்டிக்கும் களமிறக்குகிறது.

கேப்டன்கள் கருத்து

கேப்டன்கள் கருத்து

இந்த டாஸ் குறித்து பேசிய பாபர் அசாம், பாகிஸ்தானும் முதலில் பந்துவீசவே விரும்பினோம். தற்போது முதலில் பேட்டிங் விளையாடி அதிக ரன்களை குவிக்க முயற்சி செய்வோம் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய பட்லர், வானிலை நிலவரத்தை வைத்தே முதலில் பந்துவீசினோம். இறுதிப் போட்டியில் விளையாட வீரர்கள் அனைவரும் நல்ல உத்வேகத்துடன் உள்ளதாக கூறினார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இங்கிலாந்து அணி 1. அலெக்ஸ் ஹெல்ஸ், 2, ஜாஸ் பட்லர், 3, பில் சால்ட், 4.பென் ஸ்டோக்ஸ், 5, ஹாரி புருக்ஸ், 6, லியாம் லிவிங்ஸ்டோன், 7, மொயின் அலி, 8, சாம் கரண், 9,கிறிஸ் வொக்ஸ், 10, கிறிஸ் ஜார்டன், 11,ஆதில் ரஷித்

பாகிஸ்தான் அணி 1, பாபர் அசாம், 2,முகமது ரிஸ்வான், 3, முகமது ஹாரிஸ், 4, ஷான் மசூத், 5, இஃப்திகார் அகமது, 6, முகமது நவாஸ், 7, ஷதாப் கான், 8, முகமது வசீம், 9, நஷீம் ஷா, 10, ஹரிஸ் ரவுஃப், 11, ஷாகின் ஆப்ரிடி

Story first published: Sunday, November 13, 2022, 13:33 [IST]
Other articles published on Nov 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+