Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - முதல் ஆட்டத்தில் நியூசி, ஆஸி மோதல்.. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் நீக்கம்

சிட்னி : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றின் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் பலப் பரிட்சை நடத்துகின்றன.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஸ்மித் ப்ளேயிங் லெவனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதை போன்று நியூசிலாந்து அணியில் பிளேயிங் லெவனில் இருந்து குப்தில் நீக்கப்பட்டிருக்கிறார்.

ICC T20 WC super 12 - Australia won the toss and choose to bowl

டாஸ் வென்றது குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச், மேகமூட்டமாக இருப்பதால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதுகிறேன். இதனால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளோம். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவது எப்போதுமே ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், தாமும் பந்துவீச்சை தான் தேர்வு செய்வதாக இருந்ததாக குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள வில்லியம்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான திட்டத்தின்படி இன்று செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, October 22, 2022, 12:37 [IST]
Other articles published on Oct 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+