Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது இந்தியா - பாகிஸ்தான் போட்டி இல்லையா? டி20 உலகக்கோப்பை தொடரில் அதிர்ச்சி அளித்த ஐசிசி!

Recommended Video

டி20 உலகக்கோப்பை தொடரில் அதிர்ச்சி அளித்த ஐசிசி!- வீடியோ

துபாய் : ஐசிசி டி20 உலகக்கோப்பை 202௦ தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டது.

மகளிர் மற்றும் ஆடவர் பிரிவு உலகக்கோப்பை டி20 தொடர் வரும் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதன் முழு விபரங்களையும் ஐசிசி ஒரு வருடத்திற்கும் முன்பே வெளியிட்டுள்ளது.

மகளிர் கிரிக்கெட் ஸ்பெஷல்

மகளிர் கிரிக்கெட் ஸ்பெஷல்

இந்த முறை முதன் முதலாக மகளிர் மற்றும் ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் தனித் தனியாக ஒரே நாட்டில் நடத்தப்பட உள்ளது. மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நகர்வாக 2020 உலகக்கோப்பையில் மகளிர் பிரிவுக்கு இதுவரை இல்லாத அளவு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எப்போது போட்டிகள் நடைபெறும்?

எப்போது போட்டிகள் நடைபெறும்?

முதல் பத்து இடங்களில் இருக்கும் நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் பிப்ரவரி 21, 2020 முதல் மார்ச் 8, 2020 வரை நடக்கும் 23 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கும். ஆடவர் பிரிவில் முதல் 16 இடங்களில் இருக்கும் சிறந்த கிரிக்கெட் அணிகள் அக்டோபர் 18, 2020 முதல் நவம்பர் 15, 2020 வரை நடைபெறும் 45 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கும்.

மகளிர் பிரிவு அணிகள்

மகளிர் பிரிவு அணிகள்

மகளிர் பிரிவில் குரூப் ஏ-வில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இலங்கை மற்றும் தகுதி சுற்றில் வெல்லும் ஒரு அணி இடம் பெறும். குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெல்லும் மற்றொரு அணி இடம் பெறும்.

ஆடவர் பிரிவு அணிகள்

ஆடவர் பிரிவு அணிகள்

ஆடவர் டி20 உலகக்கோப்பையில் இரு பிரிவுகளில் தலா இரண்டு அணிகள், என நான்கு அணிகள் தகுதி சுற்றுகள் மூலம் தேர்வு செய்யப்படும். மற்ற பத்து அணிகள் தரவரிசை படி தேர்வு செய்யப்படும். இதில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து மற்றும் இரு அணிகள் இடம் பெறும். குரூப் பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரு அணிகள் இடம் பெறும்.

பெரிய மைதானம்

பெரிய மைதானம்

மகளிர் மற்றும் ஆடவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் இரண்டுமே உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் சுமார் 92,000 இருக்கைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மகளிர் டி20 இறுதிப் போட்டியானது, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று நடைபெற உள்ளது.

ஆச்சரியமான உண்மை

ஆச்சரியமான உண்மை

இந்திய கிரிக்கெட் அணி மகளிர் மற்றும் ஆடவர் பிரிவில் டி20 உலகக்கோப்பை குரூப் பிரிவில் பாகிஸ்தான் அணியோடு எந்த போட்டியிலும் மோதவில்லை என்பதே இந்த தொடரின் ஆச்சரியமான விஷயமாகும்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

காரணம், இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்றால் அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்ற காரணத்தால் ஐசிசி எப்போதுமே, இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் அதிக எண்ணிக்கையில் இடம் பெறும் வகையில் அட்டவணை தயார் செய்யும் ஆனால், இந்த முறை அப்படி செய்யவில்லை.

Story first published: Tuesday, January 29, 2019, 16:00 [IST]
Other articles published on Jan 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+