Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - நாளை தீர்ப்பு நாள் ! அரையிறுதிக்கு செல்லபோவது யார்? இந்தியா உள்ளிட்ட 4 அணிகள் மோதல்

மெல்போர்ன் : டி20 உலகக் கோப்பை சூப்பர் லீக் சுற்று நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. அரை இறுதி சுற்றுக்கு குரூப் ஒன்றிலிருந்து நியூஸ்லாந்து, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் குரூப் 2 வில் இருந்து இதுவரை எந்த அணியும் அரை இறுதிக்கு செல்லவில்லை. நாளை நடைபெறும் மூன்று லீக் ஆட்டத்தில் முடிவிலேயே அரையிறுதிக்குச் செல்ல போகும் அணிகள் எது என்று தெரிய வரும்.

ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் விளையாடுகிறது.

தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து

தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் .ஒரு வேளை இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் தென்னாப்பிரிக்க அணிக்கு அது பேரிடியாக வந்து இறங்கி விடும். தென்னாப்பிரிக்கா வலுவான அணியாக கருதப்பட்டாலும் முக்கிய ஆட்டத்தில் சொதப்புவது அந்த அணிக்கு கைவந்த கலை.

பாகிஸ்தான் vs வங்கதேசம்

பாகிஸ்தான் vs வங்கதேசம்

இதேபோன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதில், பாகிஸ்தான் வென்றால் மட்டுமே, மற்ற அணியின் தயவு கிடைக்கும் பட்சத்தில் அரையிறுதிக்கு செல்ல முடியும். இதேபோன்று வங்கதேசத்துக்கும் மெல்லிய அரை இறுதி வாய்ப்பும் இருக்கிறது .இரண்டு முக்கிய புள்ளிகளை யார் பெற போகிறார்கள் என்று முடிவு செய்யும் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியா vs ஜிம்பாப்வே

இந்தியா vs ஜிம்பாப்வே

இதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மெல்போர்னில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியா வென்றால் அரை இறுதியில் முதல் இடத்தை பெறலாம். இதன் மூலம் நியூசிலாந்தை அரை இறுதியில் தவிர்க்க முடியும். நாளை முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோற்றாலோ அல்லது பாகிஸ்தான் தோற்றாலோ இந்திய அணி ஜிம்பாவேக்கு எதிராக தோற்றாலும் அரை இறுதிக்குச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்திய அணி கௌரவமாக 2 புள்ளிகளை பெற்று செல்லவே முயலும்.

இந்தியா பிளேயிங் லெவன்

இந்தியா பிளேயிங் லெவன்

1. ரோகித் சர்மா, 2. கே.எல். ராகுல், 3. விராட் கோலி, 4. சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்டியா, 6. தினேஷ் கார்த்திக், 7. அக்சர் பட்டேல், 8. அஸ்வின், 9. புவனேஸ்வர் குமார், 10. முகமது ஷமி, 11. ஆர்ஸ்தீப் சிங்

Story first published: Saturday, November 5, 2022, 21:29 [IST]
Other articles published on Nov 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+