
சூப்பர் 12 சுற்று
இம்முறை சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அல்லது ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பந்து வீச்சில் பும்ரா ஜடேஜா ஆகியோர் இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது.

சேவாக்கின் சாய்ஸ்
இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணி எது என்பது குறித்து சேவாக் பதிலளித்துள்ளார். அதில் உலக கோப்பையை நடத்தும் ஆஸ்திரேலியா அணியும், இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என அவர் கூறியுள்ளார்.

ஜாகீர் கானின் தேர்வு
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா விளையாடுவதால் அந்த அணிக்கு சாதகமாக சூழல் இருக்கும் என அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய ஜாகீர் கான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என தேர்வு செய்துள்ளார். இந்திய அணி கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாக ஜாஹிர் தான் பாராட்டியுள்ளார்.

ஆஷிஸ் நெஹ்ரா ஆருடம்
இங்கிலாந்து அணி பேட்டிங் ,பந்துவீச்சு என அனைத்திலும் பலமாக அணியாக இருப்பதாகவும் ஜாகிர் கான் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய ஆஷிஸ் நெஹ்ரா, இறுதிப் போட்டியில் இந்தியா தகுதி பெரும் என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது அணியாக நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அணி தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹர்சா போக்லே அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











