Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - இந்த வாரத்தில் 4 முக்கிய போட்டி.. 2 முக்கிய அணிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

மெல்போர்ன் : ஐசிசி டி20 உலககோப்பையில் நடப்பு வாரத்தில் 4 முக்கிய ஆட்டம் நடைபெறுகிறது. முதல் சுற்று முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த முறை துபாயில் நடைபெற்றதில் டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலான போட்டியில் வென்றது . ஆடுகளமும் மொக்கையாக இருந்தது.

ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளம் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுக்கும் சாதகமாக உள்ளது. மேலும் டாசும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் மழை மட்டும் முக்கிய ஆட்டங்களில் புகழ்ந்து கெடுக்கிறது.

தென்னாப்பிரிக்கா Vs வங்கதேசம்

தென்னாப்பிரிக்கா Vs வங்கதேசம்

இந்த நிலையில், நடப்பு வாரத்தில் 4 முக்கிய ஆட்டத்தை பார்க்கலாம். வியாழன் காலை இந்திய நேரப்படி காலை 8.30 அணிக்கு வங்கதேசமும், தென்னாப்பிரிக்காவும் மோதுகிறது. தென்னாப்பிரிக்காவின் முதல் லீக் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் ஒரு புள்ளி தான் வழங்கப்பட்டது. இதனால் முதல் வெற்றியை பெறுவதற்காக தென்னாப்பிரிக்க அணி நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்றால், பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும்.

பாகிஸ்தான் Vs ஜிம்பாப்வே

பாகிஸ்தான் Vs ஜிம்பாப்வே

நாளை மதியம் சிட்னியில் இந்தியாவும், நெதர்லாந்தும் பலப்பரீட்சை நடத்துகிறது. முதல் ஆட்டத்தில் தோற்றதால் நாளைய போட்டியில் வங்கதேசம் வென்றே தீர வேண்டும். இதே போன்று நாளை மாலை 4.30 மணிக்கு பெர்த்தில் பாகிஸ்தானும், ஜிம்பாப்வே அணிகளும் மோதுகின்றன. பாகிஸ்தான் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் அந்த அணிக்கு நாளைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து

ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து

வரும் வெள்ளிக்கிழமை மெல்போர்னில் நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் தற்போது ஒரு தோல்வியை தழுவி இருப்பதால், இரண்டு அணிக்குமே இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதே போன்று சனிக்கிழமை நியூசிலாந்தும், இலங்கையும் மோதுகிறது. இதில் இலங்கை ஒரு தோல்வியை தழுவி விட்டதால், அந்த அணிக்க முக்கிய போட்டியாக இருக்கும்.

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா

ஞாயிற்றுகிழமை பெர்த் நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கும் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதுகிறது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்ததால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும். இதில் இந்திய அணி வெற்றி பெற்றால், அடுத்த சுற்று வாய்ப்பு எளிமையாக இருக்கும். தென்னாப்பிரிக்கா தோற்றால் அடுத்த சுற்றுக்கு செல்வது கடினமாகிவிடும்.

Story first published: Wednesday, October 26, 2022, 18:20 [IST]
Other articles published on Oct 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+