Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - வங்கதேசத்துக்கு எதிராக ரோகித் வைத்த டிவிஸ்ட்.. பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம்

அடிலெயட் : டி20 உலககோப்பையில் இந்திய அணி மிக முக்கியமான ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால்., இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

இந்தப் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டாலும், தற்போது டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்க இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிபுல் ஹசன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக தெரிவித்தார்.

வங்கதேச அணியில் மாற்றம்

வங்கதேச அணியில் மாற்றம்

சௌமியா சர்காரை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரான சோரிபுல் இஸ்லாமை வேங்கதேச அணி சேர்த்துள்ளது. இது குறித்து பேசிய ஷகிபுல் ஹசன், இந்திய அணியை குறைத்த ரன்களில் சுருட்டி, அந்த இலக்கை வெற்றிக்கரமாக துரத்துவோம் என்று தெரிவித்தார். பேட்டிங்கில் எங்கள் அணி கொஞ்சம் முன்னேற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தீபக் ஹூடா இல்லை

தீபக் ஹூடா இல்லை

இதனைத் தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, தாமும் பேட்டிங் செய்ய தான் முடிவு எடுத்தோம். இன்றைய ஆட்டத்தில் தீபக் ஹூடா நீக்கப்பட்டு, அக்சர் பட்டேலை அணியில் சேர்க்க முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். முதலில் ரன்கள் குவித்து, பிறகு பந்துவீச்சு மூலம் நெருக்கடி தர முயற்சி செய்வோம் என்று ரோகித் கூறினார்.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

கடைசி போட்டியில் நாங்கள் சரியாக விளையாட வில்லை என்றும் ரோகித் கூறினார். இன்றைய ஆட்டத்தில், பிளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திக் தொடர்கிறார். இன்றைய ஆட்டத்திலும், ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடக்க வீரராக ராகுல், ரோகித் சர்மா களமிறங்குகிறார்கள். இன்றைய ஆட்டத்தை 40 ஆயிரம் பேர் மைதானத்தில் கண்டு களிக்கின்றனர்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, கே.எல் ராகுல், 2, ரோகித் சர்மா, 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக், 7. அக்சர் பட்டேல், 8, அஸ்வின், 9,புவனேஸ்வர் குமார், 10, முகமது ஷமி, 11, ஆர்ஸ்தீப் சிங்

Story first published: Wednesday, November 2, 2022, 13:40 [IST]
Other articles published on Nov 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+