For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க உலககோப்பையை வெல்ல வரவில்லை..இந்தியாவை தோற்கடிக்க வந்தோம்..வங்கதேச கேப்டன் ஷகிபுல் ஹசன் கருத்து

அடிலெய்ட் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை வங்கதேச அணி, இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.

இந்த போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இந்த போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

அடிலெய்டில் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஷகிபுல் ஹசன் கருத்து

ஷகிபுல் ஹசன் கருத்து

இதனால் போட்டி நடைபெறாமல் போனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்கப்படும். இந்த நிலையில் இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச அணி கேப்டன் ஷகிபுல் ஹசன், நாளைய ஆட்டத்தில் இந்திய அணி தான் வெல்லும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை அவர்கள் உலக கோப்பையை வெல்ல வந்திருக்கிறார்கள்.

அதிர்ச்சி அளிப்போம்

அதிர்ச்சி அளிப்போம்

ஆனால் நாங்கள் இங்கு உலக கோப்பையை வெல்ல வரவில்லை. உங்களுக்கு சூழ்நிலை புரியும் என நினைக்கிறேன். நாங்கள் இந்தியாவை வீழ்த்தினால் அது மிகப் பெரிய அதிர்ச்சி சம்பவம் ஆகும். அதனால் நாங்கள் நாளை ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்த முயற்சி செய்வோம். நாங்கள் ஒரு அணியை மட்டும் குறி வைத்து கவனம் செலுத்தவில்லை.

வென்றால் போதும்

வென்றால் போதும்

நாங்கள் எங்களுடைய யுக்திகளை பின்பற்றி விளையாடுவோம். நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என மூன்று பிரிவுகளிலும் கவனம் செலுத்தி எங்கள் ஆட்டத்தை கவனம் செலுத்த வருகிறோம். எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் நாங்கள் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். நாங்கள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அது எனக்கு போதும்.

நம்பிக்கை

நம்பிக்கை

இவ்விரணிகளும் காகித அளவில் எங்களை விட சிறந்த அணி தான். ஆனால் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எங்களால் ஏன் வெற்றி பெற முடியாது. அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்து பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்த முடியும் என்றால் எங்களாலையும் பெரிய அணிகளை தோற்கடிக்க முடியும். அப்படி செய்தாலே எனக்கு மகிழ்ச்சி தான். நாளை அடிலெய்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு தான் அதிக ஆதரவு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும். நாளை ஆட்டம் நல்லதாக இருக்கும் என நம்புகிறேன்.

Story first published: Tuesday, November 1, 2022, 20:34 [IST]
Other articles published on Nov 1, 2022
English summary
ICC T20 world cup 2022 - Bangladesh captain shakib al hassan speaks about india game நாங்க உலககோப்பையை வெல்ல வரவில்லை..இந்தியாவை தோற்கடிக்க வந்தோம்..வங்கதேச கேப்டன் ஷகிபுல் ஹசன் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+