
அதிரடி தொடக்கம்
நியூசிலாந்து பந்துவீச்வசை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பட்லர், அலெக்ஸ் ஜோடியை அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். அலெக்ஸ் ஹெல்ஸ் 40 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.

180 ரன்கள் இலக்கு
மொயின் அலி 5 ரன்களில் வெளியேறினார். லிவிங்ஸ்டோன் 20 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர், 47 பந்தில் 73 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

தடுமாறிய நியூசிலாந்து
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 3 ரன்களிலும், பின் ஆலன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வில்லியம்சன், கிளன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் வில்லியம்சன் 40 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் நீஷம் 6 ரன்களில் வெளியேறினார்.

நியூசிலாந்து தோல்வி
டேரன் மிட்செல் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். தனி ஆளாக நின்று போராடி ரன் குவித்த கிளின் பிலிப்ஸ் 36 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். கடைசி 3 ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் சாம் கரண் கட்டுக்கோப்பாக பந்துவீச, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த தோல்வியை தழுவியது.

யாருக்கு வாய்ப்பு?
இதன் மூலம் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் 4 போட்டியில் விளையாடி தலா 5 புள்ளிகள் பெற்று முறையே முதலிடம், 2வது இடம் மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வென்றாலே அரையிறுதிக்கு செல்லும். இலங்கையை வீழ்த்தினாலே இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இல்லையெனில் ஆப்கானிஸ்தானை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து ரன் ரேட்டை முந்தினால் ஆஸ்திரேலிய அணி தகுதி பெறும்.


Click it and Unblock the Notifications











