Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - அரையிறுதிக்கு இங்கிலாந்து தகுதி.. தொடரை விட்டு வெளியேறியது நடப்பு சாம்பியன் ஆஸி

சிட்னி : டி20 உலககோப்பையில் இலங்கையை தனது கடைசி லீக் ஆட்டத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதன் மூலம், டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து போட்டியை நடத்தும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியது.

இதன் மூலம், நாளைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை இந்தியா வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதும்.

இலங்கை சொதப்பல்

இலங்கை சொதப்பல்

வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, டாஸை இழந்து முதலில் பந்துவீசியது. தொடக்க வீரராக களமிறங்கிய நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடினர். குசேல் மெண்டிஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, தனஞ்செய் டிசில்வா 9 ரன்களிலும், அசலங்கா 8 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

நிசாங்கா அதிரடி

நிசாங்கா அதிரடி

ஒரு முனையில் அதிரடியை காட்டிய நிசாங்கா 45 பந்தில் 67 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். ராஜபக்சா 22 பந்தில் 22 ரன்கள் மட்டுமே சேர்க்க கேப்டன் ஷனாகா, ஹசரங்கா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அபாரம்

இங்கிலாந்து அபாரம்

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை அமைத்தனர். பட்லர் 28 ரன்களில் வெளியேற, அலெக்ஸ் ஹெல்ஸ் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 106 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இங்கிலாந்து வலுவான நிலையில் இருந்தது.

அரையிறுதிக்கு தகுதி

அரையிறுதிக்கு தகுதி

அப்போது ஆட்டத்தில் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டது.ஹாரி புருக், லிவிங்ஸ்டோன் தலா 4 ரன்களிலும் ஆட்டமிழக்க,மொயின் அலி 1 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் பென் ஸ்டோக்ஸ் மட்டும் களத்தில் நின்று பொறுமையாக விளையாடி 42 ரன்கள் விளாசி, இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் இங்கிலாந்து அரையிறுதி சுற்றுக்கு சென்றது.

Story first published: Saturday, November 5, 2022, 17:27 [IST]
Other articles published on Nov 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+