For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை - இந்தியா Vs நியூசிலாந்து நாளை பயிற்சி ஆட்டம்.. ரோகித் சர்மாவின் முக்கிய மாற்றம்

பிரிஸ்பேன் : டி20 உலககோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி நாளை கடைசி பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

ஐசிசி நடத்தும் பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்த நிலையில், 2வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா , நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

நியூசி. அதிர்ச்சி தோல்வி

நியூசி. அதிர்ச்சி தோல்வி

நியூசிலாந்து அணி பலமாக விளங்கினாலும் கடைசியாக விளையாடிய பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.இதே போன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 98 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சி தோல்வியை தழுவியது.இதனால் அந்த அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.

ரோகித் பேட்டிங்

ரோகித் பேட்டிங்

இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவை பயிற்சி ஆட்டத்தில் வீழ்த்தினாலும், இன்னும் விடை தெரியாத கேள்வி பல உள்ளது. ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை கடந்த சில போட்டிகளில் வெளிக்காட்டாமல் உள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் திணறியது தெளிவாகவே தெரிந்தது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

கோலி, ஹர்திக் ஆகியோர் இன்னும் ஆஸ்திரேலிய ஆடுகளத்தின் பவுன்ஸ்க்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்ளவில்லை. இதே போன்று அக்சர் பட்டேல் பேட்டிங்கில் சோபிக்க தவறி வருகிறார். சுழற்பந்துவீச்சில் சாஹலுக்கு வாய்ப்பா இல்லை அக்சர் பட்டேலுக்கா என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. இதனால் நாளைய பயிற்சி ஆட்டத்தில், அதற்கான விடை தெரியும்.

யாருக்கு பதில் ஷமி?

யாருக்கு பதில் ஷமி?

முகமது ஷமி சிறப்பாக பந்துவீசினாலும் அவர் ஒரு ஓவர் மட்டும் தான் வீசினார். இதனால் நாளைக்கு அவர் கொஞ்சம் கூடுதல் ஓவர்கள் போடுவார் என எதிர்பார்க்கலாம். முகமது ஷமி யாருக்கு பதில் விளையாடுவார் என்பதும் குழப்பமாக உள்ளது. இப்படி பல விடைகளுக்கு நாளை விடை கிடைக்கலாம். இந்தியா பேட்டிங்கில் 11 வீரர்கள் மற்றும் பவுலிங்கில் 11 வீரர்கள் என்ற யுத்தியை நாளை கடைப்பிடிக்கும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெறும்.

Story first published: Tuesday, October 18, 2022, 19:10 [IST]
Other articles published on Oct 18, 2022
English summary
ICC T20 World cup 2022 – India facing NZ in last warm up matches டி20 உலககோப்பை - இந்தியா Vs நியூசிலாந்து நாளை பயிற்சி ஆட்டம்.. ரோகித் சர்மாவின் முக்கிய மாற்றம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+