டி20 உலககோப்பை - இறுதிப் போட்டியில் இந்தியா Vs பாக். மோத வாய்ப்பு.. இது நடந்தால் போதும்
மெல்போர்ன் : ஐசிசி t20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மீண்டும் மோதிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதினாலே அந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.ஏற்கனவே இவ்விரண்டு அணிகளும் லீக் ஆட்டத்தில் மோதின.
இந்த போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களித்தனர்.தற்போது டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு அந்த அணி கையில் இல்லை.

இறுதிப் போட்டி
குரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஆனால் குரூப் 2வில் இன்னும் எந்த அணியும் அரை இறுதி வாய்ப்பை இறுதி செய்யவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ள என்ன நடந்தால் அந்த வாய்ப்பு மீண்டும் வரும் என்பதை காணலாம்.

பாகிஸ்தான் பாதை
தற்போது நான்கு புள்ளிகள் உடன் பாகிஸ்தான அணி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும்.அதே சமயம் தென்னாப்பிரிக்க அணியை நெதர்லாந்து வீழ்த்தினால் பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும். தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்துவது எளிதல்ல.

இந்தியாவின் பாதை
இதனால் அந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் பாகிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பு அதிகமாகிவிடும். இந்தியாவைப் பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா தோற்றால் தானாக இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும். இல்லையெனில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்த வேண்டும். இது நடந்தால் இந்தியா பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும்.

இந்தியா Vs பாகிஸ்தான்
இந்த நிலையில் அரையிறுதி சுற்றில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணியையும் இந்தியா இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்ளும். அரையிறுதி சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் அவர்களது போட்டியை வென்றால் வரும் 13ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மெல்போர்ன் மைதானத்தில் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் நிச்சயம் சிறப்பாக இருக்கும் ஆனால் நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம். இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றால் வியாழன் கிழமை அடிலெய்ட் மைதானத்தில் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications