Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - அயர்லாந்து வீரர் ஹாட்ரிக் சாதனை.. ஒரு வழியாக ஃபார்ம்க்கு திரும்பிய வில்லியம்சன்

அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் ஜோஸ் லிட்டில் ஹாட்ரிக் சாதனையை செய்துள்ளார்.

தற்போது நியூசிலாந்து அணி 5 புள்ளிகளுடன் உள்ள நிலையில் , இந்த ஆட்டத்தை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.

இந்த நிலையில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபில்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசினார்.

வில்லியம்சன் அதிரடி

வில்லியம்சன் அதிரடி

இதன் மூலம் 18 பந்தில் ஆலன் 32 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் கான்வே நிதானமாக விளையாடி 33 பந்தில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் பிலிப்ஸ் 9 பந்தில் 17 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாட முற்பட்டு பெவிலியன் திரும்பினார். இந்த தொடர் முழுவதும் சொதப்பிய கேன் வில்லியம்சன், தொடரின் முக்கியமான கட்டத்தில் ஃபார்ம்க்கு திரும்பினார்.

சாதனை

சாதனை

தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன், நடப்பு தொடரில் முதல் முறையாக 100 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். 35 பந்தில் 61 ரன்கள் விளாசிய வில்லியம்சன், 5 பவுண்டரிகள், 3 சிக்சர் விளாசினார். இதன் மூலம் ஐசிசி டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஹாட்ரிக் விக்கெட்

ஹாட்ரிக் விக்கெட்

174 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் நியூசிலாந்து இருந்த நிலையல், அந்த அணி 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது தான் ஆட்டத்தில் ஒர டிவிஸ்ட் ஏற்பட்டது. அயர்லாந்து வீரர் ஜோஸ் லிட்டில், தனது துல்லியமான பந்துவீச்சு மூலம் நியூசிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

2வது அயர்லாந்து வீரர்

2வது அயர்லாந்து வீரர்

முதலில் 18.2வது ஓவரில் வில்லியம்சனையும், 18.3வது ஓவரில் ஜேம்ஸ் நீஷமையும், 18.4வது ஓவரில் மிட்செல் சாண்ட்னரையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தார். கடந்த முறை அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய நிலையில், தற்போது, ஜாஸ் லிட்டில் சாதனையை படைத்திருக்கிறார். நடப்பு உலக கோப்பையில் யுஏஇ இல் விளையாடிய சென்னை வீரர் கார்த்திக் மெய்யப்பனுக்கு பிறகு ஹாட்ரிக் சாதனையை ஜோஷ் லிட்டில் பதிவு செய்துள்ளார்.

Story first published: Friday, November 4, 2022, 13:15 [IST]
Other articles published on Nov 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+