டி20 உலககோப்பை கோலாகலமாக நாளை தொடங்குகிறது..முதல் ஆட்டத்தில் மோதுவது யார் ? தொடர் எப்படி நடக்கும்?
மெல்போர்ன் : 2022ஆம் ஆண்டு டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது.
முதல் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது. வரும் 22ஆம் தேதி மெயின் சுற்று போட்டிகளான சூப்பர் 12 சுற்று ஆட்டம் தொடங்குகிறது.
ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சியுள்ள 4 இடங்களை தீர்மானிக்கும் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருப்பது காலக்கொடுமையாக கருதப்படுகிறது.

முதல் சுற்று
ரவுண்ட் 1 இல் மொத்தம் 8 அணிகள் இருப் பிரிவுகளாக இடம்பெற்றுள்ளது. அதில் குரூப் ஏவில் நமிபியா , நெதர்லாந்து, இலங்கை மற்றும் யுஏஇ அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி-இல் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன. ரவுண்ட் ராபின் முறைப்படி, ஒவ்வொரு பிரிவில் உள்ள ஒரு அணி, மற்ற 3 அணிகளுடன் மோதும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடம் பிடிக்கும் அணி, சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றும்.

சூப்பர் 12 சுற்று
சூப்பர் 12 சுற்றில் 6 அணிகள் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டது. இதில் குரூப் 1ல் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மற்றும் 2 தகுதி பெறும் அணிகள் விளையாட உள்ளன. குரூப் 2வில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா மற்றும் 2 தகுதி பெறும் அணிகள் மோத உள்ளன. ரவுண்ட் ராபின் முறைப்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். இதில் டாப் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு செல்லும்.

முதல் போட்டி
முதல் சுற்றில் இருந்து இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் போட்டியில் இலங்கையும், நமிபியாவும் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆசிய கோப்பையை வென்ற உத்வேகத்துடன் இலங்கை இருந்தாலும், நமிபியா அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்தியா ஆட்டங்கள்
அக், 23 இந்தியா Vs பாகிஸ்தான் நேரம் நேரம்- மதியம் 1.30
அக்.27 இந்தியா Vs ரன்னர் அப் குரூப் ஏ நேரம் -மதியம் 12.30
அக்.30 இந்தியா Vs தென்னாப்பிரிக்கா நேரம்-மாலை 4.30
நவ. 2 இந்தியா Vs வங்கதேசம் நேரம்- மதியம் 1.30
நவ. 6 இந்தியா Vs வின்னர் குரூப் பி நேரம்- மதியம் 1.30


Click it and Unblock the Notifications