டி20 உலககோப்பை - அரையிறுதிக்கு முதல் அணியாக நுழைந்த நியூசிலாந்து.. 3 அணிகளிடையே மோதல்
அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது
இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து முதல் இடத்தை நிறைவு செய்தது.
வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கிய நியூசிலாந்து அணி டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.

ஃபின் ஆலன்
தொடக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசினார். இதன் மூலம் 18 பந்தில் ஆலன் 32 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் கான்வே 33 பந்தில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் பிலிப்ஸ் 9 பந்தில் 17 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாட முற்பட்டு பெவிலியன் திரும்பினார். இந்த தொடர் முழுவதும் சொதப்பிய கேன் வில்லியம்சன், தொடரின் முக்கியமான கட்டத்தில் ஃபார்ம்க்கு திரும்பினார்.

சாதனை
தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன், நடப்பு தொடரில் முதல் முறையாக 100 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். 35 பந்தில் 61 ரன்கள் விளாசிய வில்லியம்சன், 5 பவுண்டரிகள், 3 சிக்சர் விளாசினார். 174 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் நியூசிலாந்து இருந்த நிலையல், அயர்லாந்து வீரர் ஜோஸ் லிட்டில், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

2வது அயர்லாந்து வீரர்
இதன் மூலம் நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க ஜோடியாக களமிறங்கிய பால்பிரின், பால் ஸ்டர்லிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். பால் ஸ்டர்லிங் 37 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் பால்பிரின் 30 ரன்களுக்கு வெளியேறினார்.

அரையிறுதி சுற்று
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் நியூசிலாந்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது 2வது இடத்திற்கு இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும், இலங்கையும் தகுதி பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications