Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - தப்பித்தது இலங்கை.. நெதர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி.. முழு விவரம்

ஜீலாங் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் ஏ பிரிவில் நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. வாழ்வா சாவா ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது.

இதனையடுத்து தொடக்க வீரராக நிசாங்கா 14 ரன்களில் ஆட்டமிழக்க, தனஞ்செய்யா டி சில்வா கோல்டன் டக் ஆகினார்.

பொறுமையான ஆட்டம்

பொறுமையான ஆட்டம்

இதனையடுத்து 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அசலங்கா மற்றும் குசேல் மெண்டிஸ ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அசலங்கா 30 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். ராபக்சா அதிரடியாக விளையாட முற்பட்டு 13 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் கேட்சாகி ஆட்டமிழந்தார். இலங்கை அணி 14.3வது ஓவரில் தான் 100 ரன்களை எட்டியது.

இறுதியில் அதிரடி

இறுதியில் அதிரடி

இதனைத் தொடர்ந்து இலங்கை அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. குறிப்பாக குசேல் மெண்டீஸ் 44 பந்தில் 79 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி கடைசி 10 ஓவர் 102 ரன்கள் எடுத்தது.

தடுமாறிய நெதர்லாந்து

தடுமாறிய நெதர்லாந்து

இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியும் ரன் குவிக்க சிரமப்பட்டது. தொடக்க வீரர் விக்ரமிஜித் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பேஸ் டீ லீட் 14 ரன்களிலும், கோலின் அக்கர்மேன் டக் அவுட்டாகியும் வெளியேற, நெதர்லாந்து அணி 72 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இலங்கை தகுதி

இலங்கை தகுதி

ஸ்காட் எட்வர்ஸ்ட்ஸ் 21 ரன்கள் எடுக்க, தொடக்க வீரர் மேக்ஸ் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராடி சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். 53 பந்தில் 71 ரன்களை மேக்ஸ் விளாச,இதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். கடைசி ஓவரில் நெதர்லாந்து வெற்றிக்கு 23 ரன்கள் தேவை.. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. முடிவில் நெதர்லாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.

Story first published: Thursday, October 20, 2022, 13:54 [IST]
Other articles published on Oct 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+