For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை - இலங்கை ஹாட்ரிக் வெற்றி.. அயர்லாந்து அணியை பந்தாடியது.. எகிறிய ரன் ரேட்

ஹாபர்ட் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

குரூப் 1 இல் அயர்லாந்தும், இலங்கை அணியும் பர்ட் நகரில் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசியது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

அயர்லாந்து அணி கேப்டன் பால்பிரின் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் டக்கர் 10 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடிய பால் ஸ்ட்டிங் 4 பவுண்டரி, 1 சிக்சர் அடித்த நிலையில், 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த முறை அதிரடி காட்டிய குர்டிஸ் கேம்பர் 2 ரன்களிலும், ஜார்ஜ் 14 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, அயர்லாந்து அணி தடுமாறியது.

128 ரன்கள்

128 ரன்கள்

இதனைத் தொடர்ந்து இளம் வீரர் ஹாரி டெக்டார் பொறுப்பாக விளையாடி 45 ரன்களில் வெளியேற,மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

37 பந்தில் அரைசதம்

37 பந்தில் அரைசதம்

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. குசேல் மெண்டிஸ், தனஞ்செய டி சில்வா முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். தனஞ்செய டி சில்வா 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் குசேல் மெண்டிஸ் வழக்கமான தனது அதிரடியை காட்டி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இலங்கை 2வது இடம்

இலங்கை 2வது இடம்

கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற அவர் 43 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் அசலங்கா தன் பங்கிற்கு 22 பந்தில் 31 ரன்கள் சேர்க்க, இலங்கை அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 15.1வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இலங்கை அணியின் ரன் ரேட் 2.47 என்ற அளவு எகிறி, புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

Story first published: Sunday, October 23, 2022, 14:07 [IST]
Other articles published on Oct 23, 2022
English summary
ICC T20 World cup 2022 – srilanka registered hat trick win by beating Ireland டி20 உலககோப்பை - இலங்கை ஹாட்ரிக் வெற்றி.. அயர்லாந்து அணியை பந்தாடியது.. எகிறிய ரன் ரேட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+