Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி, இங்கிலாந்து வாழ்க்கையில் விளையாடிய மழை.. இனி எந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு.. முழு விவரம்

மெல்போர்ன் : டி20 உலககோப்பையில் மிக முக்கியமான ஆட்டமாக கருதப்பட்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இதனால், இரு அணிகளுக்கும் தற்போது 1 புள்ளி பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது குரூப் 1இல் 4 அணிகளும் தலா 3 புள்ளிகளை பெற்றுள்ளதால், அந்த பிரிவு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோத இருந்த ஆட்டம் மெல்போர்னில் நடைபெற இருந்தது. தற்போது அந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

குரூப் 1இல் முதலிடத்தில் நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் விளையாடி 3 புள்ளியுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.இங்கிலாந்து அணி 3 போட்டியில் விளையாடி 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அயர்லாந்த, ஆஸ்திரேலியா அணிகள் 3 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் முறையே 3வது இடத்திலும், 4வது இடத்திலும் உள்ளது.

ஆஸி அணியின் வாய்ப்பு

ஆஸி அணியின் வாய்ப்பு

இலங்கை 2 போட்கிளில் விளையாடி 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. 6வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டியில் விளையாடி 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. தற்போது, ஆஸ்திரேலியா அரையிறுதி சுற்றுக்கு வர வேண்டும் என்றால், அயர்லாந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.

இங்கிலாந்தின் வாய்ப்பு

இங்கிலாந்தின் வாய்ப்பு

ஆனால் இங்கிலாந்து அணி எஞ்சியுள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இவ்விரு அணிகளுக்கும் இருக்கும் ரன் ரேட் மிக முக்கிய பங்காற்றும். தற்போது இருக்கும் சூழலில் கருத்தில் கொண்டால், ஆஸ்திரேலிய அணிக்கு தான் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவ்விரு அணிகளும் விளையாட உள்ள எஞ்சிய போட்டியில் ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் கூட நடையை கட்ட வேண்டியது தான்.

இலங்கை, நியூசியின் வாய்ப்பு

இலங்கை, நியூசியின் வாய்ப்பு

இதே போன்று இலங்கை அணிக்கும் இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிக்கு எதிரான போட்டியிலும் இலங்கை அணி வெல்ல வேண்டும். அப்படி நடந்தால் இலங்கை அரையிறுதிக்கு செல்லும். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இலங்கை, இங்கிலாந்து,அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக போட்டி உள்ளன. இதில் நியூசிலாந்து குறைந்தது 2 போட்டியில் வென்று அதிக ரன் ரேட்டுடன் இருந்தால் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் இப்படி 4 அணிகளுக்குமே வாய்ப்பு இருப்பதால், குரூப் 1 பட்டையை கிளப்புகிறது.

Story first published: Friday, October 28, 2022, 17:40 [IST]
Other articles published on Oct 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+