Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் அணி எது?நாளை கடைசி லீக் ஆட்டம்.. குரூப் ஏ வில் இலங்கை தப்பிக்குமா

ஜீலாங் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று ஆட்டம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ரவுண்ட் 1 ல் குரூப் ஏவில் நெதர்லாந்து, நமிபியா, இலங்கை மற்றும் யுஏஇ அணிகள் விளையாடுகின்றன.

இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில், குரூப் ஏவில் கடைசி லீக் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

நாளை கடைசி லீக்

நாளை கடைசி லீக்

இதில், காலை 9.30 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறும் நெதர்லாந்து, இலங்கை மோதும் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நெதர்லாந்து அணி விளையாடிய 2 போட்டியிலும் வென்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 0.14 என்ற அளவில் குறைவாக உள்ளது. இதனால் நாளைய போட்டியில் நெதர்லாந்து அணி வென்றால் சூப்பர் 12 சுற்றுக்கு அந்த அணி தகுதி பெற்றுவிடும்.

இலங்கையின் வாய்ப்பு

இலங்கையின் வாய்ப்பு

இலங்கை அணி நடையை கட்ட வேண்டியது தான். நெதர்லாந்து நாளைய போட்டியில் தோற்றாலும், கடைசி லீக் ஆட்டத்தில் நமிபியா அணி யுஏஇ அணியிடம் தோற்றுவிட்டால், அதிக புள்ளிகள் பெற்றதன் காரணமாக நெதர்லாந்து அணி முன்னேறிவிடும். ஆனால் யுஏஇ அணி நமிபியாவை வீழ்த்துவது கடினம் என்பதால், நெதர்லாந்துக்கு நாளைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நெதர்லாந்தின் சவால்

நெதர்லாந்தின் சவால்

இதே போன்று இலங்கை அணியை பொறுத்தவரை நாளை நெதர்லாந்தை வீழ்த்தினாலே , சூப்பர் 12 சுற்றுக்கு அந்த அணி சென்றுவிடலாம். நெதர்லாந்தில் திறமையான வீரர்கள் இருந்தாலும், அவர்களை சமாளிக்கும் பக்குவம் இலங்கை அணியிடம் உள்ளது, இதனால் இலங்கை ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை. ஒரு வேளை நெதர்லாந்தும் வென்று, யுஏஇ யும் வென்றால், அதிக ரன் ரேட் இருப்பதால் நமிபியா தகுதி பெறும்.

பி பிரிவில் யாருக்கு வாய்ப்பு?

பி பிரிவில் யாருக்கு வாய்ப்பு?

இதே போன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் குரூப் பி பிரிவின் கடைசி லீக் ஆட்டமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாபவே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 4 அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளது, இதனால் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் யார் வெல்கிறார்களோ, அவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்று விடுவார்கள்.

Story first published: Wednesday, October 19, 2022, 18:51 [IST]
Other articles published on Oct 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+