Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரையிறுதியில் இந்தியா யாருடன் மோதுகிறது? நியூசிலாந்தை தவிர்க்க இந்தியா என்ன செய்யனும் ? விவரம் இதோ

சிட்னி : 2022 ஆம் ஆண்டு டி20 உலககோப்பை தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் சூப்பர் 12 சுற்றில் வெறும் 6 போட்டிகள் தான் எஞ்சியுள்ளது. ஆனால், இன்னும் ஒரு அணி கூட அரையிறுதி சுற்றுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், இந்திய அணியை பொறுத்தவரை தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெல்ல வேண்டும். ஒரு வேலை பாகிஸ்தான் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் , வங்கதேசத்தை வென்றால், இந்தியாவுக்கு ஜிம்பாப்வே ஆட்டம் Do or die போட்டியாக மாறிவிடும்.

அரையிறுதி வாய்ப்பு

அரையிறுதி வாய்ப்பு

ஒரு வேலை வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்திவிட்டால் , ஜிம்பாப்வேவிடம் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது ஆனால் ஜிம்பாப்வேவை வீழ்த்துவது இந்தியாவுக்கு அவ்வளவு கடினமாக இருக்காது என நம்ப படுவதால், இந்தியா அரையிறுதியில் யாரை சந்திக்கும் என்று தற்போது காணலாம்.

யாருடன் அரையிறுதி?

யாருடன் அரையிறுதி?

அரையிறுதியில் யார் வேண்டுமானாலும் வரட்டும். நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா இருந்தாலும் சரி, பலம் வாய்ந்த இங்கிலாந்தாக இருந்தாலும் சரி, ரசிகர்களுக்கு கவலை கிடையாது. ஆனால் நியூசிலாந்து மட்டும் வரக்கூடாது என்பதே ரசிகர்களின் வேண்டுதல். காரணம், 2019 உலககோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்றது நியூசிலாந்திடம் தான்.

ஆபத்து தரும் நியூசி.

ஆபத்து தரும் நியூசி.

அது மட்டுமல்ல, இதுவரை டி20 உலககோப்பையில் இந்தியாவும், நியூசிலாந்தும் 3 முறை மோதி உள்ளன. இதில் இந்தியா அனைத்து போட்டியிலும் தோல்வியை தழுவி உள்ளது. இதனால் நியூசிலாந்தை எதிர்கொள்ள தவிர்க்க வேண்டும் என்றால், இந்தியா தனது குரூப்பில் 2வது இடத்தை பிடிக்காமல் இருக்க வேண்டும்.

இந்தியா சந்திக்கும் அணி

இந்தியா சந்திக்கும் அணி

ஆம், குரூப் 1 இல் நியூசிலாந்து தான் முதலிடம் என தெளிவாக தெரிகிறது.அதனால் இந்தியா தனது கடைசி ஆட்டமான ஜிம்பாப்வே உடன் வென்றால், இந்திய அணி தங்களது குரூப்பில் முதல் இடம் பிடித்து, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தை சந்திக்கும். அதுவே, ஜிம்பாப்வே உடன் தோற்று, அரையிறுதிக்கு சென்றால் இந்தியா நியூசிலாந்தை சந்திக்கும்.

Story first published: Thursday, November 3, 2022, 19:31 [IST]
Other articles published on Nov 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+