
புள்ளி பட்டியல்
குரூப் 2வில் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் வங்கதேசத்தில் 3 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 2 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகளில் களமிறங்கி 3 புள்ளிகளுடன் உள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து அணி தலா 2 போட்டிகளில் விளையாடி புள்ளியே பெறாமல் முறை 5வது மற்றும் 6வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தானுக்கு வாய்ப்பு
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வர வேண்டும் என்றால் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுடன் தோற்க வேண்டும், இதே போன்று ஜிம்பாப்வே அணி வங்கதேசத்திடமும், இந்தியாவுடனும் தோற்க வேண்டும். இதில் தற்போது ஜிம்பாப்வே அணி வங்கதேசத்திடம் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதே போல் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிடம் தோற்றால் பாகிஸ்தானுக்கு லக் அடிக்கும். ஆனால் அதற்கு பாகிஸ்தான் எஞ்சிய 3 போட்டியில் வெல்ல வேண்டும்.

வங்கதேசம் வாய்ப்பு
இதே போன்று ஜிம்பாப்வே அணி எஞ்சியுள்ள நெதர்லாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக வென்றால், அந்த அணியும் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. வங்கதேச அணிக்கு தற்போது பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் எஞ்சியுள்ளது. இதில் குறைந்தபட்சம் 2 போட்டியில் வங்கதேசம் வென்றால் கூட அரையிறுதிக்கு சென்றுவிடும்..

இந்தியாவுக்கும் ஆபத்து
தென்னாப்பிரிக்காவின் கதையும் அப்படி தான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் குறைந்தபட்சம் 2 போட்டியில் வென்றாலும் அரையிறுதி வாய்ப்பு கிடைத்துவிடும். இதே போன்று இந்திய அணிக்கும் எஞ்சிய 3 போட்டியில் குறைந்தது 2 போட்டியிலாவது வெல்ல வேண்டும். தென்னாப்பிரிக்கா போட்டியில் இந்தியா தோற்றால், எஞ்சிய 2 போட்டியும் இந்தியாவுக்கு வாழ்வா சாவா போட்டியாக மாறிவிடும்.


Click it and Unblock the Notifications











