For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு இவ்வளவு ஈஸியான குரூப்பா? கண்ணை மூடி கொண்டு வெல்லலாம்!

மும்பை : 2024 ஆம் ஆண்டு ஐசிசி t20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கிறது.

இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளன குரூப் எ ,குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

ICC t20 World cup 2024 - India and Pakistan are in very easy group

இதன்பிறகு அரை இறுதி , இறுதிப் போட்டி என நடைபெறும். டி20 உலக கோப்பையில் வியாபார நோக்கில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில் கடைசிவரை விளையாடினால் மட்டுமே ஐசிசிக்கு நிறைய வருமானம் கிடைக்கும். இதனை மனதில் வைத்துக் கொண்டு குரூப் சுற்றிலே இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் மோதுவது போல் ஐசிசி தொடரை வடிவமைத்து இருக்கிறது.

அந்த வகையில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கத்துக்குட்டி அணிகளுடன் இவ்விரு அணிகளும் விளையாட உள்ளது. அதன்படி அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுடன் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளது.

இது இரு நாடுகளுக்கும் கிடைத்த லக்காக பார்க்கப்படுகிறது. அதே சமயம் டி20 உலக கோப்பையில் தொடக்கத்தில் இவ்வளவு எளிதான அணிகளுடன் இந்தியா மோதுவது சரியில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவும் ,பாகிஸ்தானும் அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை எளிதில் வீழ்த்தி விடும்.

இதனால் கொஞ்சம் கூட ஒரு விறுவிறுப்பும் பரபரப்பும் ரசிகர்களுக்கு கிடைக்காது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகள் வேண்டுமானால் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கலாம் என்றும் ஆனால் மற்ற லீக் ஆட்டங்கள் போர் அடிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 20 அணிகளுக்கு பதிலாக 14 அல்லது 16 அணிகளுடன் நிறுத்தி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Story first published: Friday, January 5, 2024, 15:41 [IST]
Other articles published on Jan 5, 2024
English summary
ICC t20 World cup 2024 - India and Pakistan are in very easy group டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு இவ்வளவு ஈஸியான குரூப்பா? கண்ணை மூடி கொண்டு வெல்லலாம்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+