Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியானது.. 20 பேர் இடம் பிடித்துள்ள அணி விவரம்

மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை வரும் ஜூன் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அணியை வரும் மே ஒன்றாம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது.

இந்த நிலையில் பிசிசிஐயின் தேர்வு குழு தலைவர் அகார்கர், 20 பேர் கொண்ட உத்தேச அணியை தேர்வு செய்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட போகிறார்.

ICC T20 World cup 2024- indian team probables selected by bcci under Rohit sharma captaincy

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த உத்தேச பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். எனினும் அவர் தன்னுடைய பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அவர் சேர்க்கப்படுவார் என்ற தகவல் வெளியானது. இதேபோன்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த உத்தேச பட்டியில் இடம் பிடித்திருக்கிறார். எனினும் அவர் தன்னுடைய பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அவர் சேர்க்கப்படுவார் என்ற தகவல் வெளியானது. இதேபோன்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த உத்தேச பட்டியலில் கே எல் ராகுலுக்கும் இடம் கிடைத்திருக்கிறது. சுழற் பந்துவீச்சாளராக ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சாகல், ரவி பிஸ்னாய் ஆகிய ஐந்து வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இதே போன்று சிஎஸ்கே அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே பெயரும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

வேகப்பந்துவீச்சாளராக பும்ரா, சிராஜ், ஆர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான் ஆகிய நான்கு பெரும் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த உத்தேச பட்டியலில் இருந்து 15 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் ஐந்து வீரர்கள் மாற்று வீரராக இருப்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.லக்னோ அணியில் இடம் பிடித்திருக்கும் வேகப்பந்துவீச்சாளர் மாயங் யாதவ்க்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும் பிரச்சனை இருப்பதால் அவருடைய பெயர் இந்த உத்தேசப்பட்டியலில் இடம்பெறவில்லை.

Story first published: Wednesday, April 17, 2024, 18:44 [IST]
Other articles published on Apr 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+