ஐசிசி டி20 உலககோப்பை 2026: இந்தியா விளையாடும் போட்டிகள் விவரம்.. IND vs PAK போட்டி எப்போது?
மும்பை: 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி, பிப்ரவரி 12 ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நமீபியாவை சந்திக்கிறது. இந்த போட்டியும் இரவு 7 மணிக்கே நடக்கிறது.

அதன்பின், பிப்ரவரி 15 ஆம் தேதி தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் கொழும்பு ஆர். பிரேமதாசா சர்வதேச மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும். லீக் சுற்றில் இந்திய அணி நெதர்லாந்துடன் தனது கடைசி ஆட்டத்தை பிப்ரவரி 18 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடும்.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. மொத்தம் 20 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன. இவை தலா நான்கு அணிகள் கொண்ட ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் எட்டு' சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் எட்டு சுற்றில் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். சமீபத்தில், 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. வங்கதேசம், இத்தாலி, இங்கிலாந்து, நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் குரூப் சி பிரிவில் உள்ளன. குரூப் டி பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.


Click it and Unblock the Notifications