Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி20 உலககோப்பை.. இந்தியா,பாகிஸ்தான் போட்டி எங்கு எப்போது? பைனல் தேதி விவரம்

மும்பை: ஐசிசி 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக இந்திய அணி களமிறங்க உள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டிகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் இந்த தொடரின் முக்கிய போட்டிகள் எப்போது எங்கு நடைபெறும் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

ICC T20 World cup 2026

அதன்படி இந்தியா தங்களுடைய முதல் போட்டியை அமெரிக்காவுடன் மோத இருக்கின்றது. அதேபோன்று குரூப் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் இரு அணிகளும் பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் மோத இருக்கின்றது.

இரு நாட்டுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருப்பதன் காரணமாக பாகிஸ்தான் அணி தங்களுடைய போட்டிகள் அனைத்தையும் கொழும்பு நகரில் விளையாட உள்ளது. இதில் இந்தியா, சென்னையில் ஒரு போட்டியில் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்று இந்தியாவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இந்தியா விளையாடும் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அவர்கள் கொழும்புவில் மோதுவார்கள். ஆனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மும்பையில் தான் நடக்கும்.

இந்த தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் மார்ச் 8ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை போல் இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம்பெறுவார்கள். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகளாக விளையாடுவார்கள். அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதியில் மோதுவார்கள்.

Story first published: Friday, November 21, 2025, 14:33 [IST]
Other articles published on Nov 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+