Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரஸ் மீட்டில் பாபர் அசாம்க்கு ஆச்சரியம்.. மறக்க முடியாத நாளாக மாறியது..நெகிழ்ச்சியில் பாக். கேப்டன்

மெல்போர்ன் :டி20 உலககோப்பை தொடருக்கான கிரிக்கெட் அணியில் பாபர் அசாம்க்கு மற்ற அணி கேப்டன்கள் ஸ்விட் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்தனர்.

டி20 உலககோப்பை தொடர் நாளை தொடங்கும் நிலையில், அனைத்து அணி கேப்டன்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கேப்டன்கள் அனைவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்து கொண்டனர். இதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கேப்டன்கள் பல விவகாரங்கள் குறித்து பேசினர்.

வெற்றி முக்கியம்

வெற்றி முக்கியம்

அப்போது பேசிய பாபர் அசாம், நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரை வென்றது, எங்கள் வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. உலககோப்பைக்கு முன் இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியம். நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரில் நாங்கள் நிறைய கற்று கொண்டோம்.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

எங்களுடைய முதல் போட்டிக்கு முன்பு இன்னும் 6 நாட்கள் இருக்கிறது. அதற்கு இடையில் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறோம். அந்த 2 போட்டிகளையும் நாங்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்வோம். ஷாகின் ஆப்ரிடிக்கு இந்த ப் போட்டி மிகவும் முக்கியம். காயத்திலிருந்து திரும்பி அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க வேண்டும்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

கடைசி 2 போட்டிகளாக எங்களுடைய நடுவரிசை வீரர்கள் பங்களிப்பு தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய நடுவரிசை வீரர்கள் டி20 உலககோப்பையிலும் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புகிறேன். எங்களுடைய பந்துவீச்சு தான் எங்களுடைய பலமே. ஷாகின் வந்த பிறகு அது மேலும் அதிகரிக்கும் என்று கூறினார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்த நிலையில், பாபர் அசாம் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ஓட்டி பாபர் அசாம்க்கு, அனைத்து அணி கேப்டன்களும் கேக் வழங்கினர். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாபர் அசாம், பின்னர் கேக்கை வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதன் பின்னர், ஒவ்வொரு கேப்டன்களும், அவரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Story first published: Saturday, October 15, 2022, 21:30 [IST]
Other articles published on Oct 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+