For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இறுதிப் போட்டியில் களமிறங்கும் 2 முக்கிய வீரர்கள்.. பாகிஸ்தானுக்கு செம லக்.. பிளேயிங் XI இதோ

மெல்போர்ன் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து, பாகிஸ்தான் அணி மோத உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இரு அணிகளும், 1992 உலககோப்பை இறுதிப் போட்டியில் மெல்போர்னில் மோதின.

அப்போது, பாகிஸ்தான் அணி தங்களது அபார பந்துவீச்சால் இங்கிலாந்தை வீழ்த்தி இம்ரான் கான் தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆடுகளம்

ஆடுகளம்

தற்போது இம்ரான் கான் செய்த சாதனையை 30 ஆண்டுகளுக்கு பிறகு பாபர் அசாம் செய்வாரா என்ற எதிர்பார்பபு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. மெல்போர்னில் தற்போதைய நிலவரப்படி மழை பெய்யவில்லை. எனினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட வாய்ப்பு உள்ளது.

டாஸ்

டாஸ்

எனினும் ஆடுகளத்தில் ஈரம் அதிகமாக இருந்தால், பந்தும் ஸ்விங் ஆகாது. பேட்டிற்கும் பந்து சரிவர வராது. அப்போது குறைந்த ஸ்கோரை அடித்தாலே வெற்றிக்கு போதுமானது. சூழ்நிலைகள் தற்போது பாகிஸ்தானுக்கு சாதகமாக தான் உள்ளது. டாஸ் வென்று பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்து, இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோரில் வீழ்த்த முயற்சி செய்யும்.

காயமடைந்த வீரர்கள்

காயமடைந்த வீரர்கள்

இங்கிலாந்து அணி பேட்டிங் வலுவாக இருப்பதால், அந்த அணி எப்படி பட்ட இலக்கையும் சேஸிங் செய்துவிடும். மேலும் முக்கிய அட்டங்களில் இங்கிலாந்து அணியும் CHOKE ஆவதில் வல்லவர்கள். ஏதோ, 2019 ஆண்டு நியூசிலாந்தை பூர்வீகமாக கொண்ட பென் ஸ்டோக்ஸ் காப்பாற்றினார். காயம் காரணமாக அரையிறுதியில் இடம்பெறாத மார்க் வுட், டேவிட் மாலன் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டதால், அவர்கள் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இங்கிலாந்து அணி 1. அலெக்ஸ் ஹெல்ஸ், 2, ஜாஸ் பட்லர், 3, டேவிட் மாலன் / பில் சால்ட், 4.பென் ஸ்டோக்ஸ், 5, ஹாரி புருக்ஸ், 6, லியாம் லிவிங்ஸ்டோன், 7, மொயின் அலி, 8, சாம் கரண், 9,கிறிஸ் வொக்ஸ், 10, மார்க் வுட் /கிறிஸ் ஜார்டன் / டேவிட் வில்லி, 11,ஆதில் ரஷித்

பாகிஸ்தான் அணி 1, பாபர் அசாம், 2,முகமது ரிஸ்வான், 3, முகமது ஹாரிஸ், 4, ஷான் மசூத், 5, இஃப்திகார் அகமது, 6, முகமது நவாஸ், 7, ஷதாப் கான், 8, முகமது வசீம், 9, நஷீம் ஷா, 10, ஹரிஸ் ரவுஃப், 11, ஷாகின் ஆப்ரிடி

Story first published: Sunday, November 13, 2022, 11:32 [IST]
Other articles published on Nov 13, 2022
English summary
ICC T20 World cup England and Pakistan Playing xi – Pitch report இறுதிப் போட்டியில் களமிறங்கும் 2 முக்கிய வீரர்கள்.. பாகிஸ்தானுக்கு செம லக்.. பிளேயிங் XI இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+