Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை இறுதி போட்டி - அது தான் பெரிய திருப்புமுனையே.. பாகிஸ்தான் தோல்விக்கு 4 முக்கிய காரணம்

மெல்போர்ன் : டி20 உலககோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 2வது முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மெல்போர்னில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி இலக்கை எட்டியது.

தடுப்பாட்ட முறை

தடுப்பாட்ட முறை

பாகிஸ்தான் அணியின் பெரிய பிரச்சினையே அதன் பேட்டிங் தான். குறிப்பாக இறுதிப் போட்டியில் பவர்பிளேவில் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டும். அரையிறுதியில் இந்தியா என்ன தவறை செய்ததோ, அதே தவறை தான் இங்கிலாந்தும் செய்தது. ரிஸ்வான் ஆட்டமிழந்ததும், பாகிஸ்தான் தடுப்பாட்ட முறைக்கு சென்றது.

தைரியம் இல்லாத பேட்டிங்

தைரியம் இல்லாத பேட்டிங்

பவர்பிளேவில் அந்த அணி 39 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், அதே இங்கிலாந்தில் பட்லர் கண்ணை மூடிக்கொண்ட தைரியமாக விளையாடினார். நஷிம் ஷா ஓவரில் பின்னால் தூக்கி சிக்சர் அடித்தது எல்லாம் வேற லெவல் தைரியம் அந்த தைரியத்தை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தவில்லை. இதே போன்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஆன்கர் ரோல் ஆடி கடைசி வரை நின்று இருக்க வேண்டும்.

ரஷித் வலை

ரஷித் வலை

ஆதில் ரஷித் விரித்த வலையில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சிக்கினர். அவருடைய பந்தை அடித்து ஆடாமல், கேப்பை பார்த்து அடித்து ரன் ஓடி இருந்தாலே பாகிஸ்தானுக்கு 150 ரன்கள் கிடைத்திருக்கும். இதே போன்று பாகிஸ்தான் பந்துவீச்சில், முதலில் அதிக WIDE மற்றும் EXTRA ரன்களை கொடுத்தனர். அதற்கு காரணம், பந்துகளை கண்ணா பிண்ணா என்று ஸ்விங் செய்ததால் வந்த வினையாக அமைந்தது. பாகிஸ்தான் பவுலர்கள் WIDE மட்டும் 8 ரன்களை கொடுத்தனர்.

ஷாகின் ஆப்ரிடி காயம்

ஷாகின் ஆப்ரிடி காயம்

இதே போன்று, பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஆப்ரிடி, முக்கிய கட்டத்தில் காயம் அடைந்தார். இதனால் அவர் வீச வேண்டிய 2 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர் தான் வீசினார். இது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை பயன்படுத்தி கொண்டு இங்கிலாந்து வென்றது. பாகிஸ்தான் செய்த சிறு சிறு தவறு, அந்த அணிக்கு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை பறித்தது.

Story first published: Sunday, November 13, 2022, 17:22 [IST]
Other articles published on Nov 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+