Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதி போட்டிக்கு சங்கு ஊதிய மழை.. ஒரு பால் கூட வீச முடியாது போலயே.. மாற்று ஏற்பாடுகள் தீவிரம்

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி வரும் 13ஆம் தேதி மென்போர்னில் நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்றன.

கடந்த மூன்று வாரமாக நடைபெற்ற இந்த தொடரில் பாகிஸ்தானும் இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இரண்டு அணிகளும் மெல்போர்னில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பழைய வரலாறு

பழைய வரலாறு

1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இதே மெல்போர்ன் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான அணி முதல் முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது. தற்போது 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே மைதானத்தில் அதே இங்கிலாந்தை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான அணி எதிர்கொள்கிறது. பாகிஸ்தான அணி லீக் சுற்றிலே தொடரை விற்று சென்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

பலமான அணிகள்

பலமான அணிகள்

ஆனால், சரியான நேரத்தில் அவர்களது பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் ஃபார்முக்கு திரும்பி நெதர்லாந்து அணியின் உதவியுடன் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் , பாபர் அசாம், முகமது ஹாரிஸ் போன்ற டாப் வரிசை வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு பலமாக கருதப்படுகிறது. அதே சமயம் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உத்வேகத்துடன் உள்ளது.

மழை ஆபத்து

மழை ஆபத்து

பேட்டிங் பந்துவீச்சு பில்டிங் என அனைத்திலும் டாப் கிளாஸ் ஆக உள்ளது. எனினும் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் 95% கண்டிப்பாக மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 15 மில்லி மீட்டரில் இருந்து 25 மில்லி மீட்டர் மழை பெய்ய இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் தினத்திலும் மழை

ரிசர்வ் தினத்திலும் மழை

இந்த நிலையில் இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் அடுத்த நாள் திங்கட்கிழமை ரிசர்வ் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திங்கட்கிழமையும் 95% மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியை எப்படி நடத்துவது என்ற குழப்பத்தில் ஐசிசி உள்ளது. இதனால் மைதான பணியாளர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக பணி செய்து ஆடுகளத்தை காத்து வருகின்றனர். குறைந்தபட்சம் 10 ஓவர் ஆட்டமாக இந்த போட்டி நடைபெறலாம்.

ஐசிசி விதிகள்

ஐசிசி விதிகள்

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மழை பாதிப்பால் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியவில்லை என்றால் திங்கட்கிழமை 20 ஓவர் போட்டியாக நடைபெறும். எனினும் அன்றும் மழை குறிக்கிட்டால் கூடுதலாக நான்கு மணி நேரம் போட்டியை நடத்த ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மழையால் ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டால் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து திங்கட்கிழமை போட்டி தொடங்கும் . குறைந்தபட்ச தகுதியாக 10 ஓவர்கள் கூட வீச முடியவில்லை என்றால் இரண்டு அணிகளும் உலகக்கோப்பை பகிர்ந்து கொள்ளும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

Story first published: Friday, November 11, 2022, 18:42 [IST]
Other articles published on Nov 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+