
நல்ல வாய்ப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சொதப்பினாலும், கத்துக்குட்டிக்கு எதிராக தன்னுடைய வீரத்தை காட்டி விட்டு, அப்படியே 2,3 போட்டிகளில் ஒப்பி அடிக்கலாம் என்ற எண்ணத்துடன் கேஎல் ராகுல் இருக்கிறார். டி20 உலககோப்பையில் தன்னுடைய முத்திரையை பதிக்க நெதர்லாந்து அணி ரோகித் சர்மாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

நடுவரிசையில் மாற்றம்
விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நாளைய ஆட்டத்தில் நிச்சயம் இடம்பெறுவார்.கள். ஹர்திக் பாண்டியா 100 சதவீதம் உடல் தகுதி இருந்தால் பாண்டியா இருப்பார். இல்லையேனில் அவர் இடத்தில் தீபக் ஹூடா இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இதே போன்று அக்சர் பட்டேலுக்கு பதில் சாஹலை சேர்க்கவும் ரோகித் திட்டமிட்டுள்ளார்.

பந்துவீச்சு
பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் தனது திறமையை நிரூபித்த அஸ்வின், ஃபில்டிங்கில் திணறுவது பின்னடைவாக கருதப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் பாகிஸ்தானக்கு எதிராக களமிறங்கிய அதே அணி தான் இந்தப் போட்டியிலும் விளையாடும்.

பிளேயிங் லெவன்
1, கேஎல் ராகுல், 2, ரோகித் சர்மா, 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா / தீபக் ஹூடா . 6. தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல் /ஹர்சல் பட்டேல், 8, அஸ்வின், 9, புவனேஸ்வர் குமார், 10, முகமது ஷமி, 11, ஆர்ஸ்தீப் சிங்


Click it and Unblock the Notifications











