Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவை புறக்கணித்த ஐ.சி.சி..!! கிழித்து தொங்கவிட்ட ஹிட்மேன் ரசிகர்கள்..!!

மும்பை: இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை ஐ.சி.சி. புறக்கணித்த சம்பவம் அவரது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

Recommended Video

Rohit Sharma Captaincy-ல் Dhoni-ன் சாயல் தெரிந்த சுவாரஸ்யம்

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.

ICC T20 World cup No Place for Rohit sharma in Promotional Poster

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

இந்த நிலையில், 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போஸ்டரை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து அணிகளின் கேப்டன் படங்களையும் ஐ.சி.சி.போட்டுள்ளது. இதில் இந்திய அணியை குறிக்கும் விதமாக விராட் கோலியின் புகைப்படத்தை போட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

ICC T20 World cup No Place for Rohit sharma in Promotional Poster

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் சர்மாவை பி.சி.சி.ஐ. நியமித்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், ஐ.சி.சி. இன்னும் விராட் கோலி தான் கேப்டன் என்பது போல் சித்தரித்து இருப்பதாக ரோகித் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ICC T20 World cup No Place for Rohit sharma in Promotional Poster

இதற்கு பதில் அளித்துள்ள விராட் கோலி ரசிகர்கள், அணியின் ஸ்டார் வீரர்களை மட்டும் தான் ஐ.சி.சி. போஸ்டரில் வெளியிட்டுள்ளதாகவும், விராட் கோலி தான் ஸ்டார் என்பதால் அவர் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகவும் விமர்சித்துள்ளனர். இதனால் யார் ஸ்டார் வீரர் என்று இரு வீரர்களின் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, February 8, 2022, 13:52 [IST]
Other articles published on Feb 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+