Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா மேட்ச்..! பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி.. ஜிம்பாப்வே அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது

பெர்த்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாவேக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

பெர்த் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான அணி வெல்ல வேண்டிய முனைப்புடன் களமிறங்கியது.டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .

முதலில் ஜிம்பாப்வே அணி அதிரடியாக விளையாட முற்பட்டாலும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தது.

தடுமாறிய ஜிம்பாப்வே

தடுமாறிய ஜிம்பாப்வே

கேப்டன் எர்வின் 19 ரன்களும்,மேத்வீர் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து மில்டன் 8 ரன்களில் வெளியேற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசா 16 பந்துகளில் ஒன்பது ரன் மட்டுமே எடுத்தார்.விக்கெட் கீப்பர் சாக்பாவா டக் அவுட் ஆக அந்த அணியின் நட்சத்திர வீரர் சென் வில்லியம்ஸ் மட்டும் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.

131 ரன்கள் இலக்கு

131 ரன்கள் இலக்கு

இறுதியில் பிராட் எவன்ஸ் 19 ரன்கள் சேர்க்க, ஜிம்பாவே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்திலும் ஷாகின் ஆப்ரிடி விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான அணி களம் இறங்கியது.அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 4 ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

இதே போன்று ரிஸ்வான் 14 ரன்களிலும் இஸ்திகார் அஹமத் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான அணி வலுவான நிலையில் இருந்தது.அப்போது சிக்கந்தர் ராசா பந்து வீச்சிக் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தனர். மசூத் 44 ரன்களிலும், சதாப்கான் 17 ரன்களிலும், ஹைதர் அலி டக் அவுட் ஆகியும் வெளியேற பாகிஸ்தான அணி கடுமையாக தடுமாறியது.

கடைசி கட்டம்

கடைசி கட்டம்

இந்த நிலையில் கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என இருந்தது. அப்போது நவாஸ் சிக்ஸரும்,வசீம் ஜூனியர் பவுண்டரிகளும் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். இந்த நிலையில் கடைசி ஒரு ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நவாஸ் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தார். இதனால் கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷாகின்அப்ரிடி இரண்டாவது ரன் ஓடும்போது அவுட் ஆனார்.

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

இதனால் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதுவரை ஜிம்பாப்வே அணியிடம் 18 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான அணி தற்போது தான் இரண்டாவது முறை தோல்வியை அடைந்திருக்கிறது. ஏற்கனவே இந்தியாவுடன் தோல்வியடைந்த நிலையில் தற்போது ஜிம்பாப்வே அணியிடம் வீழ்ந்ததால் பாகிஸ்தான அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கடினமாகிவிட்டது.

Story first published: Thursday, October 27, 2022, 20:49 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+