
இந்தியாவுக்கு அழைப்பு
இந்த நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற அந்த அணியின் மெண்டர் மேத்யூ ஹைடன் இந்தியாவை ஃபைனலுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பேசி அவர் இறுதி ஆட்டத்தில் நாங்கள் இந்தியாவை சந்திக்கவே விரும்புகிறோம். ஏனென்றால் மக்கள் தொகையில் ஒரு பகுதி அந்த ஆட்டத்தை காண மைதானத்திற்கு வந்துவிடுவார்கள்.

திருவிழா
அதை பார்க்கும் போதே பிரமிப்பாக இருக்கும். அதைப்பற்றி நினைத்தாலே அற்புதமாக இருக்கிறது. இந்தியா இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என நான் விரும்புகிறேன். அதன் பிறகு மெல்போர்னில் திருவிழா போல் இறுதி போட்டி நடைபெறும். ஆனால் இன்று இரவும் என்னால் மறக்க முடியாது என்று ஹைடன் கூறியுள்ளார்.

பயம் காத்திருக்கிறது
இதனைத் தொடர்ந்து பேசிய அவர் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. உங்களால் நம்பவே முடியாது அந்த அளவிற்கு அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இன்னும் பாகிஸ்தான அணி அவருடைய முழு திறமையை வெளிப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. எங்களை இறுதிப் போட்டியில் யார் எதிர்கொள்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பயம் காத்திருக்கிறது.

பாராட்டு
மெல்போர்ன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என நம்புகிறேன். பாபர் மற்றும் ரிஸ்வான் பாகிஸ்தானுக்கு பல வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். முகமது ஹாரிஸ் பயிற்சியிலேயே அனைத்து பந்துவீச்சாளர்களையும் சிதறடித்து வருகிறார். ஹரிஷ் ரவுப் தொடர்ந்து 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறையாமல் பந்து வீசி வருகிறார்.

போர் குணம்
பாகிஸ்தான், அன்றைய நாளில் சிறப்பாக விளையாடினால் அவர்களை தடுத்து நிறுத்தவே முடியாது. சதாப் கான் எங்கள் அணியின் சிறந்த போராளியாக விளங்குகிறார். நீங்கள் எந்த தொடரை வெல்ல வேண்டும் என்றாலும் நீங்கள் போராட வேண்டும். பைனலில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோத வேண்டும் என்று நான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று ஹைடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications