For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடப்பு டி20 உலககோப்பையில் முதல் சதம்.. 52 பந்துகளில் தென்னாப்பிரிக்க வீரர் சதம்.. ஆனாலும் ஒரு தவறு

சிட்னி : 2022 டி20 உலககோப்பையில் தென்னாப்பிரிக்க வீரர் ரெய்லி ரூசோவ் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். குரூப் 2 வில் மிக முக்கியமான ஆட்டத்தில் வங்கதேசத்தை, தென்னாப்பிரிக்கா எதிர்கொண்டது.

தென்னாப்பிரிக்க அணியின் முதல் ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால் ஒரு புள்ளி தான் கிடைத்தது. இதனையடுத்து இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பெவுமா, குயின்டன் டி காக் களமிறங்கினர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

பெவுமா வழக்கம் போல் 6 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது 2வது விக்கெட்டுக்கு குயின்டன் டி காக்குடன் , ரூசோவ் களமிறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குயின்டன் டி காக் வங்கதேச பந்துவீச்சை பதம் பார்த்தார்.

150 ரன்கள்

150 ரன்கள்

38 பந்துகளை எதிர்கொண்ட அவர் 63 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் ரூசோவ் வங்கதேச பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார். இதனால் 13.3வது ஓவரிலேயே தென்னாப்பிரிக்க அணி 150 ரன்களை தொட்டது. இந்த ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், ரூசோவ் சதம் அடிப்பதற்காக தனது ரன் குவிப்பு விகதத்தை குறைத்தார்.

ரூசோவ் சதம்

ரூசோவ் சதம்

இந்த நிலையில் குயின்டன் டி காக் ஆட்டமிழந்த நிலையில், 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 163 ரன்களை சேர்த்து புதிய சாதனை படைத்தது. புதிய வீரர்களான ஏய்டன் மார்க்ரம், ஸ்டப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸ் சற்று தடுமாறியது. சதம் எடுக்க சில பந்துகளை வீணடித்த ரூசோவ் 52 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். ரூசோவ் 109 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 8 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

தென்னாப்பிரிக்காவின் தவறு

தென்னாப்பிரிக்காவின் தவறு

இதன் மூலம் டி20 சர்வதேச போட்டியில் தொடர்ந்து 2 சதம் விளாசிய முதல் (Test Playing Nation) வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 205 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. தென்னாப்பிரிக்க அணி 240 ரன்களுக்கு மேல் அடித்திருக்க வேண்டும் . ஆனால் ரூசோவ் சதம் விளாசுவதற்காக ரன் அடிக்கும் வேகத்தை குறைத்ததாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே குற்றஞ்சாட்டியுள்ளார். தென்னாப்பிரிக்க அணி கடைசி 5 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 27, 2022, 12:13 [IST]
Other articles published on Oct 27, 2022
English summary
ICC T20 World cup - Rilee Rossouw scored century vs Bangladesh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+