Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை அரையிறுதி சுற்று - மழையால் ஆட்டம் ரத்தானால் என்ன ஆகும்.. பைனலுக்கு செல்வது யார்?

டி20 உலக கோப்பை அரை இறுதி சுற்று நாளை முதல் தொடங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இதனை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை நடைபெறும் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்து அணியை மோதுகிறது.

இந்த நிலையில் போட்டி மழையால் ரத்த ஆனால் என்ன ஆகும் என்பதை தற்போது காணலாம்.

மழை குறுக்கீடு

மழை குறுக்கீடு

குரூப் சுற்று ஆட்டங்கள் மழையால் ரத்தான போது ஐசிசி மாற்று ஏற்பாடுகளை செய்யாதது குறித்து ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நாக் அவுட் சுற்றுக்கு மாற்று ஏற்பாடாக ரிசர்வ் தினத்தை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி மழையால் ஆட்டம் ரத்தானால் வெள்ளி அல்லது சனிக்கிழமை போட்டிகள் விடுபட்ட இடத்திலிருந்து நடைபெறும்.

இறுதிப் போட்டியில் யார்?

இறுதிப் போட்டியில் யார்?

அப்போது மழை குறுக்கிட்டால் டக்வொர்த் லூயிஸ் விதி பயன்படுத்தப்படும். ஆனால் தற்பொழுது இரண்டு இன்னிங்ஸிலும் 10 ஓவர்கள் முடிவடைந்தால் மட்டுமே அமல்படுத்தப்படும் என ஐசிசி கூறியுள்ளது. அப்படியும் போட்டி நடைபெறாமல் ரத்தானால் புள்ளி பட்டியலில் எந்த அணி முதலிடம் பிடித்ததோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.அதன்படி நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மழை விளையாடினால் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.

இந்தியாவுக்கு லக்

இந்தியாவுக்கு லக்

இதேபோன்று இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் மழையால் ரத்தானால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இதனால் மழை வந்தால் கூட இந்தியாவுக்கு சாதகமான சூழல்தான் நிலவுகிறது .ஒருவேளை இரண்டு அரையிறுதி ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும்.

ரிசர்வ் தினம்

ரிசர்வ் தினம்

இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் அடுத்த நாள் ரிசர்வ் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் போட்டி நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும். அப்போதும் போட்டியை தொடர முடியவில்லை என்றால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் டி20 உலக கோப்பையை பகிர்ந்து கொள்ளும். நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இரவு 7:00 மணிக்கு தான் நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்

வானிலை நிலவரம்

அந்த நேரத்தில் சிட்னியில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் காலை நேரத்தில் இரண்டு முறை மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என தெரிகிறது. அதேபோன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் அரை இறுதி ஆட்டத்தின் போது அடிலெய்டில் மழை இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, November 8, 2022, 21:51 [IST]
Other articles published on Nov 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+