Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கா? யாருடன் வென்றால் அடுத்த சுற்றுக்கு போகலாம்? முழு விவரம்

பெர்த் : டி20 உலககோப்பையில் பி பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணி விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் அந்த அணி இன்னும் ஒரு புள்ளிகள் கூட பெறாமல், புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இன்னும் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து பார்ப்பதற்கு முன், அந்த அணியின் கேப்டன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

என்னை பொறுத்த வரை உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்கள் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்று கூறியுள்ள பாபர் அசாம், எஞ்சியுள்ள போட்டியை வெல்ல முயற்சி செய்வோம் என்று கூறினார். தற்போது இந்தியா விளையாடிய 2 போட்டியில் வென்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 2 போட்டியில் விளையாடி 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

பாக். க்கு எஞ்சிய போட்டி

பாக். க்கு எஞ்சிய போட்டி

இதே போன்று ஜிம்பாப்வே அணியும் 2 போட்டியில் விளையாடி 3 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், வங்கதேசம் 2 போட்டியில் விளையாடி 2வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 5வது இடத்திலும், நெதர்லாந்து 6வது இடத்திலும் உள்ளது. இனி பாகிஸ்தான் அணி நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் மோத உள்ளது.

வழி இருக்கிறது

வழி இருக்கிறது

இதில் பாகிஸ்தான் அனைத்து போட்டியிலும் வெல்ல வேண்டும். அதே சமயம் தென்னாப்பிரிக்கா, இந்தியா மோத உள்ள ஆட்டத்தில் இந்தியா வெல்ல வேண்டும். இப்படி நடந்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்பபு கிடைக்க வழி உள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது தற்போது பாகிஸ்தானுக்கு பெரிய சிக்கலாக இருக்கலாம்.

ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு

ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு

இதே போன்று அரையிறுதி சுற்றுக்கு செல்ல ஜிம்பாப்வே அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி இந்தியா, பாகிஸ்தான் அணியோடு தோற்று, ஜிம்பாப்வே அணி நெதர்லாந்து மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தினால், அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். இதே போன்று ஜிம்பாப்வேவும், தென்னாப்பிரிக்காவும் எஞ்சிய போட்டிகளில் வென்றால், அந்த அணிகள் அரையிறுதிக்கு போய்விடும், இந்தியா வெளியேறிவிடும்.

Story first published: Friday, October 28, 2022, 18:29 [IST]
Other articles published on Oct 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+