
144 ரன்கள்
இப்ராஹிம் சாட்ரன் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். குலாப்தீன் 12 ரன்களிலும், கேப்டன் முகமது நரி 13 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். நட்சத்திர வீரர் ரஷித் கான் 9 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இலங்கை நிதானம்
இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 ஓவர்கள் மட்டுமே வீசி 13 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் நிசாங்கா 10 ரன்களில் வெளியேறினார். தொடக்க வீரர் குசேல் மெண்டிஸ் 27 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.

வெற்றி
அசலங்கா 19 ரன்களிலும், ராஜபக்சா 18 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, தனி ஆளாக நின்ற தனஞ்செய டி சில்வா 42 பந்துகளில் 66 ரன்கள் சேர்க்க 18.3 வது ஒவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எட்டு, வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் இலங்கை அணி புள்ளி பட்டியலில் 4 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகள் பெற்று, 3வது இடத்தை பிடித்தார்.

புள்ளி பட்டியல்
தற்போது நியூசிலாந்து அணி 3 போட்டியில் விளையாடி 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது, இலங்கை, இஙஙகிலாந்து மோதும் ஆட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.


Click it and Unblock the Notifications











