Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்தை பந்தாடியது தென்னாப்பிரிக்கா.. 104 ரன்கள் வித்தியாசத்தில் அபாரம்.. எகிறிய ரன்ரேட்

சிட்னி : 2022 டி20 உலககோப்பையில் வங்கதேசத்தை 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி முதலிடத்தை பிடித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணியின் முதல் ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால் ஒரு புள்ளி தான் கிடைத்தது. இதனையடுத்து இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பெவுமா, குயின்டன் டி காக் களமிறங்கினர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

பெவுமா வழக்கம் போல் 6 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது 2வது விக்கெட்டுக்கு குயின்டன் டி காக்குடன் , ரூசோவ் களமிறங்கினார். 38 பந்துகளை எதிர்கொண்ட டி காக் 63 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் ரூசோவ் வங்கதேச பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார். இதனால் 13.3வது ஓவரிலேயே தென்னாப்பிரிக்க அணி 150 ரன்களை தொட்டது. இந்த ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், ரூசோவ் சதம் அடிப்பதற்காக தனது ரன் குவிப்பு வேகத்தை குறைத்தார்.

ரூசோவ் சதம்

ரூசோவ் சதம்

இந்த நிலையில் குயின்டன் டி காக் ஆட்டமிழந்த நிலையில், 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 163 ரன்களை சேர்த்து புதிய சாதனை படைத்தது. புதிய வீரர்களான ஏய்டன் மார்க்ரம், ஸ்டப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸ் சற்று தடுமாறியது. சதம் எடுக்க சில பந்துகளை வீணடித்த ரூசோவ் 52 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். ரூசோவ் 109 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 8 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

206 ரன்கள் இலக்கு

206 ரன்கள் இலக்கு

இதன் மூலம் டி20 சர்வதேச போட்டியில் தொடர்ந்து 2 சதம் விளாசிய முதல் (Test Playing Nation) வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 205 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் சௌமியா சர்கார் அதிரடியாக விளையாட முற்பட்டு 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்சர்கள் அடங்கும்.

அபார வெற்றி

அபார வெற்றி

ஷகிபுல் ஹசன், ஆபிஃப் ஹுசைன் ஆகியோர் தலா 1 ரன்னில் வெளியேற வங்கதேச அணி தடுமாறியது. லிட்டன் தாஸ் மட்டும் போராடி 31 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, வங்கதேச அணி 16.3 வது ஒவரில் 101 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது, இதன் மூலம் அந்த அணியின் ரன் ரேட் 5.52 ஆக உயர்ந்தது.

Story first published: Thursday, October 27, 2022, 12:55 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+