டி20 உலககோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியீடு.. இந்தியா யாருடன் மோதுகிறது தெரியுமா? முழு விவரம்
மும்பை: டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. முதலில் தகுதி சுற்று போட்டிகளும். பிறகு சூப்பர் 6 சுற்று போட்டிகளும் நடைபெறும்
Recommended Video
இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் ஏற்கனவே தங்களது அணியை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஐசிசி தொடர் நடைபெறும் போது, அணிகளுக்கு பயிற்சி செய்ய ஏதுவதாக பயிற்சி ஆட்டங்களை ஐசிசி அறிவிக்கும்.

அக்டோபர் 10 முதல்
இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்களின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை தவிர ஒவ்வொரு அணியும் 2 பயிற்சி ஆட்டங்களை விளையாடும். தகுதிச் சுற்றில் பங்கேற்கும் அணிகளுக்கும் இம்முறை பயிற்சி ஆட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, அக்டோபர் 10 முதல் 13ஆம் தேதி வரை தகுதி சுற்றில் பங்கேற்கும் அணிக்கு பயிற்சி ஆட்டம் நடைபெறும்.

தகுதி சுற்று அணிகள்
அக்டோபர் 10ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் Vs யூ.ஏ.இ
அக்டோபர் 10ஆம் தேதி ஸ்காட்லாந்து Vs நெதர்லாந்து
அக்டோபர் 10ஆம் தேதி இலங்கை Vs ஜிம்பாப்வே
அக்டோபர் 11 ஆம் தேதி நமிபியா Vs அயர்லாந்து
அக்டோபர் 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் Vs நெதர்லாந்து

இந்தியா முதல் ஆட்டம்
அக்டோபர் 13ஆம் தேதி ஜிம்பாப்வே Vs நமிபியா
அக்டோபர் 13ஆம் தேதி இலங்கை Vs அயர்லாந்து
அக்டோபர் 13ஆம் தேதி ஸ்காட்லாந்து Vs யூ.ஏ.இ
அக்டோபர் 17ஆம் தேதி இந்தியா Vs ஆஸ்திரேலியா
அக்டோபர் 17ஆம் தேதி நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா

இந்தியா 2வது ஆட்டம்
அக்டோபர் 17ஆம் தேதி இங்கிலாந்து Vs பாகிஸ்தான்
அக்டோபர் 17ஆம் தேதி ஆப்கானிஸ்தான் Vs வங்கதேசம்
அக்டோபர் 19ஆம் தேதி ஆப்கானிஸ்தான் Vs பாகிஸ்தான்
அக்டோபர் 19ஆம் தேதி வங்கதேசம் vs தென்னாப்பிரிக்கா
அக்டோபர் 19ஆம் தேதி இந்தியா Vs நியூசிலாந்து


Click it and Unblock the Notifications