Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 வீரர்களின் ஸ்டம்பை பதம் பார்த்த அல்சாரி ஜோசப்.. முக்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

ஹாபர்ட்: டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.

ரவுண்ட் 1 குரூப் பி பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியதால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய உத்வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

பெரிய பொறுப்பு

பெரிய பொறுப்பு

தொடக்க வீரராக களமிறங்கிய கைல் மெயர்ஸ் 13 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து எலன் லீவிஸ், சார்லஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பவர்பிளே முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. லீவிஸ் 15 ரன்களிலும், கேப்டன் பூரான் 7 ரன்களிலும் வெளியேறினர்.

போராடிய பேட்ஸ்மேன்கள்

போராடிய பேட்ஸ்மேன்கள்

தொடக்க வீரர் சார்லஸ் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 45 ரன்கள் விளாசி ஆட்டமிழந்த நிலையில், புருக்ஸ் டக் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹோல்டர் 4 ரன்களில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் ரோமன் போவெல் 28 ரன்களும், அகேல் ஹூசைன் 23 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

ஜிம்பாப்வே சரிவு

ஜிம்பாப்வே சரிவு

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் வீஸ்லி 27 ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் சிக்பவா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனி, சென் வில்லியம்ஸ், மில்டன் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க ஜிம்பாப்வே அணி சரிவை நோக்கி சென்றது.

அல்சாரி 4 விக்கெட்

அல்சாரி 4 விக்கெட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசா 14 ரன்களிலும், லுக் ஜாங்கி 29 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்ப மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 10 பந்துகள் எஞ்சிய நிலையில் 122 ரன்களில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் 4 வீரர்களை கிளின் போல்ட் செய்தார். இதன் முலம் பி பிரிவில் அனைத்து அணிகளும் ஒரு போட்டியை வென்றுள்ளதால்,கடைசி லீக் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, October 19, 2022, 21:52 [IST]
Other articles published on Oct 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+