Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC டி20 தரவரிசை.. இசான் கிஷன், சூர்யகுமார் முன்னேற்றம்.. தொடர்ந்து 25 வயது வீரர் முதலிடம்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 207 ரன்கள் குவித்து ஒரு சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், ஐசிசி ஆண்கள் டி20ஐ பேட்ஸ்மேன் தரவரிசையில் 32 இடங்கள் உயர்ந்து 32வது இடத்தைப் பிடித்துள்ளார். பிப்ரவரி 7 அன்று தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இத்தரவரிசை வெளியாகியுள்ளது.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானின் சாகிப்சாதா ஃபர்ஹானை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில், தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் 3-0 என வென்றது.

இந்த தொடரில் 119 ரன்கள் மற்றும் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய 23 வயதான சாய்ம் அய்யூப், டி20ஐ ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து, சிகந்தர் ராஜாவை பின்னுக்குத் தள்ளினார்.பாகிஸ்தானின் அப்ரார் அஹமது இரண்டாவது இடத்துக்கு உயர்ந்துள்ளார்; முதலிடத்தில் உள்ள வருண் சக்ரவர்த்தியை விட அவர் 28 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். ஐந்து விக்கெட்கள் எடுத்த ஆல்-ரவுண்டர் முகமது நவாஸ் பந்துவீச்சாளர் தரவரிசையில் எட்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் ஆதில் ரஷித் நான்காவது இடத்துக்கும், நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் எட்டு இடங்கள் உயர்ந்து 23வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். பேட்ஸ்மேன்களின் முதல் 10 இடங்களுக்குள் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (3வது), இலங்கையின் பதும் நிஸ்ஸங்கா (5வது), நியூசிலாந்தின் டிம் செய்ஃபர்ட் (9வது) ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

இதே போன்று தென்னாப்பிரிக்காவின் ரியான் ரிக்லெட்டன் 42 இடங்கள் உயர்ந்து 40வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் 16 இடங்கள் உயர்ந்து 14வது இடத்தையும் பிடித்துள்ளனர். அண்மையில் சதம் அடித்த குவின்டன் டி காக் 15 இடங்கள் முன்னேறி 22வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Story first published: Wednesday, February 4, 2026, 20:12 [IST]
Other articles published on Feb 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+